நாடகமுறை கற்பித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாடகமுறை கற்பித்தல் என்பது இயல்பாக மாணவரிடையே காணப்படும் நடிப்பாற்றலை கற்றலில் பயன்படுத்துவதாகும். ஆரம்ப, நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு நாடகமுறையில் கற்பிக்கும் பொழுது பாடப்பொருள் உயிரோட்டம் பெறும்.

படிநிலைகள்[தொகு]

 • நடிப்பதற்கு ஏற்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்தல்
 • நடிப்பதற்கு ஏற்ற முறையில் வடிவமைத்தல்
 • நாடகமாக நடித்துக் காட்டுதல்

நாடகமுறைக்கான வழிகாட்டுதல்[தொகு]

 • பாடப்புத்தகத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுத்து வகுப்பறையில் படித்து காண்பித்து, வசனங்களை எழுதச் சொல்ல வேண்டும். ஓரங்க வசனமாகவும் அமையலாம்.
 • நாடகங்களில் உள்ள பாடத்தொடர்பான நிகழ்வுகளைப் படித்துக் காட்டலாம்.
 • வரலாற்று உரையாடல்களைப் படிக்கச் செய்து, அவைகளில் அடங்கியுள்ள வரலாற்று உண்மைகளை எழுதச் சொல்லலாம்.
 • பாடங்களை அறிமுகப்படுத்த நடித்துக் காட்டலாம். இது மாணவர்களின் உள்ளங்களை பாடத்தின்பால் கவரும்.

நடிப்பதற்கு ஏற்ற பகுதிகள்[தொகு]

 1. உலகத்தில் பற்பல பகுதிகளில் வாழும் மக்கள் தொகை
 2. அரசியல் சபைகள், அரசியல் ஆலோசனைக் கூட்டங்கள்
 3. பெரிய தலைவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள்

நடிக்கக் கூடாத பகுதிகள்[தொகு]

 1. சண்டைக் காட்சிகள், போர்நிகழ்வுகள், இறக்கும் காட்சிகள், படுகொலைகள், தூக்கிலிடுதல், மனித உருவ அமைப்பை கேலி செய்தல் போன்றவை நடிக்கக் கூடாத பகுதிகள்

நாடகத்தின் வகைகள்[தொகு]

வ.எண் வகைப்படுத்துவதற்கான அடிப்படை வகைகள்
1 கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கை தனி நடிப்பு, குழு நடிப்பு
2 வசனம் இடம் பெறும் முறை சொல்சார்ந்த நடிப்பு, செய்கை சார்ந்த நடிப்பு
3 அங்கங்களின் எண்ணிக்கை ஓரங்க நாடகம், பல அங்க நாடகம்
4 நாடகம் நிகழ்த்தும் முறை படிப்பதற்குரியவை, நடிப்பதற்குரியவை
5 புலன் அடிப்படை கேட்பதற்குரியவை, பார்ப்பதற்குரியவை
6 குரல் அடிப்படை ஒருவரே பல கதாப்பாத்திரத்தில் பல குரலில் நடிப்பது, ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் தனித்தனி நபர் நடிப்பது

மேற்கோள்[தொகு]

[1]

 1. வள நூல் குழு (2009). நாடக முறை கற்பித்தல். தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். பக். 181 - 185. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடகமுறை_கற்பித்தல்&oldid=2722856" இருந்து மீள்விக்கப்பட்டது