உள்ளடக்கத்துக்குச் செல்

நாகப்பட்டினம் சட்டைநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகப்பட்டினம் சட்டைநாதசுவாமி கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

[தொகு]

நாகப்பட்டினம் காயாரோகணர் நீலாயதாட்சி அம்மன் கோயிலுக்கு மேற்கே ஆதிகாயாரோகணம் என்ற இடத்தில் பீசண பைரவர் சட்டை நாதராக உள்ளார்.[1]

இறைவன், இறைவி

[தொகு]

இக்கோயிலில் உள்ள மூலவர் சட்டைநாதர். பைரவர் மிக உக்கிரமாகக் காணப்பட்டதால் அவருக்கு இடப்புறமாக அமுதவல்லி அம்மன் சன்னதி அமைக்கப்பட்டு, பைரவர் சாந்த மூர்த்தியானதாகக் கூறுகின்றனர்.[1]

அமைப்பு

[தொகு]

திருமலைராயன்பட்டினத்தை ஆட்சி செய்த மன்னனின் மகள் பிரம்மராட்சசன் பிடியில் அகப்பட்டு, பின்னர் அதிலிருந்து விடுபட்டு சுகமடைந்ததாகவும், அதற்காக நன்றிக்கடனாக மன்னன் கோயிலை விரிவாக்கம் செய்ததாகக் கூறுகின்றனர். தொடர்ந்து விழாக்கள் நடக்கவும் மன்னன் ஏற்பாடு செய்ததாகக் கூறுவர். தெற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ள உயர்ந்த கட்டமலை மீது சட்டைநாதர் சன்னதி காணப்படுகிறது. கருவறை முன்பாக அர்த்த மண்டபம், மகா மண்டபம், முக மண்டபம் ஆகியன உள்ளன. காயாரோகணர், ஆதிநீலாயதாட்சி அம்மன் சன்னதிகள் கிழக்கு நோக்கிய நிலையில் காணப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014