நாகபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகபுரம் என்பது ஓர் ஊர்.

புகார் நகரத்து அரசி, சித்திராபதி, அவளது ஆயம், மணிமேகலை ஆகியோர் அறவண அடிகளிடம் நல்லறம் கேட்டனர்.
பின்னர் மணிமேகலை புத்தத் துறவிக் கோலத்தில் அந்தரம் வழியாகப் பறந்து சென்றாள்.
வழியில் ஓர் ஊரின் பொழிலில் இறங்கி இளைப்பாறினாள்.
அங்கு மாதவ முனிவனை வணங்கி அந்த ஊரைப் பற்றி வினவினாள்.
மாதவ முனிவன் அந்த ஊரைப்பற்றிச் சொன்னான்.

இந்திரன் கால்வழியினர் (மருமான்) இந்த ஊரை ஆள்கின்றனர்.
இந்த ஊரின் பெயர் நாகபுரம்.
இப்போது ஆள்பவன் பூமிசந்திரன் மகன் புண்ணியராசன் (ஆபுத்திரன்).
இவன் பிறந்த நாளிலிலிருந்து இவ்வூரில் மழைவளம் பொய்த்ததில்லை. மக்கள் நோயின்றி வாழ்கின்றனர் – என மாதவன் கூறினான்.[1]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மணிமேகலை - 24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகபுரம்&oldid=1466818" இலிருந்து மீள்விக்கப்பட்டது