நல்பதனீசுவரம் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயிலின் முதன்மை வளாகம்

நல்பதனீசுவரம் மகாதேவர் கோயில், கேரள மாநிலம் ஆலப்பி மாவட்டத்தில் செர்தலா வட்டம் பனவல்லி கிராமத்தில் நல்பததெனேசுவரத்தில் அமைந்துள்ள மகாதேவர் கோயிலாகும். இவ்விடம் சேர்த்தலாவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் சேர்ந்தாலா -ஆறுக்குட்டி பேருந்து வழித்தடத்தில் உள்ளது.

இங்கு சிவபெருமான் கிராத கோலத்தில் இருக்கிறார். அமைதியான, கிராமத்து சூழலில் கலை ரசனையுடன் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் கும்பம் (மாசி-மார்ச்) மாதத்தில் கொண்டாடப்படுகிறது. [1] இவ்விழா ஏழு நாட்கள் நடைபெறும். அந்த அனைத்து நாள்களும் பாரம்பரிய முறைப்படி முக்கியமான நாள்களாகக் கருதப்படுகின்றன. (உத்சவபலி, கூடி எழுச்சி, பரணி, கார்த்திகா, ஆராட்டு). இக்கோயிலில் உள்ள மூலவரை மக்கள் "நல்பதனீசுவரத்தப்பன்" என்று அழைக்கின்றனர்.

இக்கோயிலில் உறைகின்ற மற்ற தெய்வங்கள், கணபதி, வராஹமூர்த்தி, துர்காதேவி, சொவ்வ பகவதி, நாகராஜர், நாகயட்சி, ஐயப்பன் போன்றவையாகும். இக்கோயிலின் வடமேற்கு பகுதியில் ஊரளி பரம்பத்து சாஸ்தா கோயில் என்று அழைக்கப்படுகின்ற ஒரு இணைக்கோயில் உள்ளது. சமீபத்தில் மறைந்த பழம்பெரும் சோரோடு நாராயணப்பணிக்கர் தலைமையில் அமைந்த குழுவினரின் தேவபிரசன்னத்தின்போது இக்கோயில் 1000 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த கோயில் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

இக்கோயில் கோழிச்சேரில், பாய்ப்பட்டு, முல்லக்கேரில் என்றழைக்கப்படுகின்ற மூன்று பண்டைய கைமால் குடும்பத்தாரின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இக்கோயில் தெய்வத்திற்கான முக்கியமான பிரசாதம் கதகளி ஆகும். இதனாலேயே இக்கோயில் கதகளிக்குப் பெயர் பெற்றதாகும். இக்கோயிலைப் பற்றி பல வரலாறுகள்ம கூறப்பட்டு வருகின்றன. இவ்விடம் பாண்டவர் வேலி என்றழைக்கப்பட்டதாகவும், பின்னர் பனவல்லி என்றதானதாகவும் அங்குள்ள மூத்த குடிமக்கள் கூறுகின்றனர். இக்கோயிலின் கிழக்கே 1 கி.மீ. தொலைவில் நான்கு பெரிய கற்கள் உள்ளன. பாண்டவர்களுடைய வனவாசத்தின்போது அந்தக் கற்கள் பாலைச் சூடாக்கப் பயன்படுத்தப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]