உள்ளடக்கத்துக்குச் செல்

நரிசாரா நுவட்டிவாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்சரோயன்
சியாமின் இளவரசர்
இளவரசர் நரிசாரா நுவட்டிவாங்
கருவூல அமைச்சர்
ஆட்சிக்காலம்21 மார்ச் 1892 – 23 திசம்பர் 1894
பிறப்பு(1863-04-28)28 ஏப்ரல் 1863
பெரிய அரண்மனை, தாய்லாந்து, பேங்காக், சியாம்
இறப்பு10 மார்ச்சு 1947(1947-03-10) (அகவை 83)
பேங்காக், சியாம்
மரபுசக்ரி வம்சம்
தந்தைமோங்குத் (நான்காம் ராமா)
தாய்பான்னரை

இளவரசர் நரிசாரா நுவட்டிவாங் (Prince Narisara Nuwattiwong ) (28 ஏப்ரல் 1863 - 10 மார்ச் 1947) இளவரசர் சித்தாரோன் என்றும் சுருக்கமாக நரிஸ் என்றும் அழைக்கபட்ட இவர்,சியாமின் (இப்போது தாய்லாந்து ) சக்ரி வம்சத்தில் உறுப்பினராக இருந்தார். ஒரு அறிஞரான இவர் தாய்லாந்தில் அமைச்சராகவும், தளபதியாகவும், இருந்துள்ளார். இவர் ஓர் பல மொழிகள் அறிந்தவராவார். இவர் "சியாமின் சிறந்த கைவினைஞர்" என்றும், "இளவரசர் மாஸ்டர்" என்று அறியப்பட்டார். [1] இவர் பிறந்த நாளான, ஏப்ரல் 28 ஆண்டுதோறும் தாய்லாந்தில் "இளவரசர் நரிஸ் தினம்" என்று கொண்டாடப்படுகிறது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் 1863 ஏப்ரல் 28 அன்று தாய்லாந்தின் பேங்காக்கில் இளவரசி பான்னரை என்பவருக்கும், அரசர் மோங்குத்துக்கும் ( நான்காம் ராமா ) மகனாகப் பிறந்தார். இவர், மேற்கத்தியக் கல்வி முறையைக் கற்றார். மேல்ய்ம் நுண்கலைகளில் ஆர்வமும் கொண்டிருந்தார். [2]

தொழில்[தொகு]

அரசு[தொகு]

இவர், உள்துறை அமைச்சகத்திற்கான பொதுப்பணி, நகரம் மற்றும் நாடு திட்டமிடல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் தாய்லாந்தின் ஆரம்பகால நகர்ப்புறத் திட்டத்தில் பணிபுரிந்தார். மேலும், தாய்லாந்து பேரரசின் தொழில்நுட்பக் கழகத்தில் கலை ஆலோசகரானார். கருவூல அமைச்சகம், போர் அமைச்சகம், அரண்மனை அமைச்சகம் ஆகியவற்றிலும், இவர் பணியாற்றினார். 1892 முதல் 1894 வரை இவர் கருவூல அமைச்சராக பணியாற்றினார்.

1894 முதல் 1899 வரை இவர் போர் அமைச்சராக இருந்தார். 1896 முதல் 1899 வரை, இராணுவ தளபதியாகவும், அட்மிரலாகவும் இருந்த இவர் கூடுதலாக இராணுவ நடவடிக்கை திணைக்களத்தின் தளபதி பதவியையும் வகித்தார். இது அக்கால சியாமிய இராணுவத்தில் மிக உயர்ந்த இராணுவ பதவியாகும். 1898 முதல் 1899 வரை இவர் கடற்படைத் துறையின் தளபதியாகவும், சியாமிய கடற்படையின் கட்டளை அதிகாரியாகவும் இருந்தார். [3]

இவரது மருமகன் அரசன் பிரஜாதிபோக் (ஏழாம் ராமா) என்பவர் தனது கண் நோய்க்கு இங்கிலாந்தில் சிகிச்சை பெரும்போது போது இவர் இவர் 1934 முதல் 1935 வரை சியாமின் அரசப் பிரதிநிதியாக பணியாற்றினார். 1935 இல் பிரஜாதிபோக்கின் திட்டவட்டமான பதவி நீக்கம் மற்றும் 9 வயதான ஆனந்த மகிதோலை புதிய அரசனாக தேர்வு செய்த பின்னர், இவர் தனது வயதை சுட்டிக்காட்டி, அரசப் பிரதிநிதியாக தொடர கோரிக்கையை மறுத்துவிட்டார். [4]

வடிவமைப்பு[தொகு]

இவர், தனது கலை முயற்சிகளைத் தொடங்கியபோது, சியாமிய வடிவமைப்பு பற்றிய கருத்து எதுவும் இல்லை. தாய்லாந்தில் கலை அருங்காட்சியகமும் இல்லை. கலைகள் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படவில்லை. இவர் சியாமிய கைவினைஞர்களுடனும் இத்தாலிய கலைஞர்களுடனும் சியாமிய "கலையை" உருவாக்க பணியாற்றினார். [5]

தாய்லாந்து நவீனமயமாகத் தொடங்கியதும், அதன் முதல் ஐரோப்பிய பாணி அரசாங்க அமைச்சகங்களை உருவாக்கியது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த அமைச்சகங்களுக்கான முகட்டை வடிவமைக்க இவர் நியமிக்கப்பட்டார். இவர் வடிவமைத்த ஒவ்வொரு முகடும் வேறுபட்டது, ஒவ்வொரு குழுவின் பங்கையும் குறிக்கிறது. [1]

கட்டிடக்கலை[தொகு]

வாட் பெஞ்சமாபோபிட் (மார்பிள் கோயில்) தாய்லாந்தில் அதன் கட்டுமானத்தில் பளிங்கைப் பயன்படுத்திய முதல் கோயில் ஆகும். இந்த கோயில் நவீன பௌத்த ஆலயத்தின் வரையறுக்கப்பட்ட எடுத்துக்காட்டு என்று மேற்கத்திய கட்டிடக்கலை அறிஞர்களால் விவரிக்கப்பட்டுள்ளது.

வாட் பெஞ்சமாபோபிட் கோயிலுக்கு அடுத்ததாக வாட் பெஞ்சமாபோபிட் பள்ளி ஒன்று உள்ளது. கோயிலைப் போலல்லாமல், பள்ளி மேற்கத்திய பாணியில் கட்டப்பட்டது. பிராபோசோத்வத்ராச்சடிவாசே என்பது பளிங்குகளால் ஆன மற்றொரு கோயில், ஆனால் இந்த கட்டிடத்தின் பாணி மேற்கத்திய மற்றும் தாய் பாணிகளை ஒருங்கிணைக்கிறது. இந்த கோவிலில் மேற்கு இடைக்கால தேவாலயங்களில் காணப்படும் கலைகளால் ஈர்க்கப்பட்ட எண்ணெய் ஓவியங்கள் உள்ளன.

குடும்பம்[தொகு]

இவர் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் மனைவி மாம் ராச்சவோங்ஸ் ப்ளூம் சிரிவோங்சே மூலம் ஒரு மகள் இருந்தாள்.

தனது முதல் மனைவியின் மரணத்திற்குப் பிறகு, இவர் மாம் மலாய் சித்ரபோங்சே நா அயுத்தயாவை திருமணம் செய்து கொண்டார். அவருடன் இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்:

தனது இரண்டாவது மனைவியின் மரணத்திற்குப் பிறகு, இளவரசர் கடைசியாக ஒரு முறை மறுமணம் செய்து கொண்டார். மாம் ராச்சவோங்சே து என்கோன் என்பவரை திருமணம் செய்து கொண்டதின் மூலம், இவர்களுக்கு மொத்தம் ஆறு குழந்தைகள் இருந்தன. அவர்களில் ஐந்து பேர் ஆண்களாவர்:

இறப்பு[தொகு]

இவர் 1947 மார்ச் 10 அன்று பக்கவாதத்தால் இறந்தார். இவரது இறுதி சடங்கு சனம் லுவாங்கில் நடைபெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Silpakorn Channel. "Documentary of Prince Naris Official" (Video, subtitled). YouTube (in Thai and English). Silpakorn University. பார்க்கப்பட்ட நாள் 2019-04-25.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Ally Anumudu (11 December 2012). "The King and I". Prezi. பார்க்கப்பட்ட நாள் 27 February 2014.
  3. เจริญวงศ์, สุรศักดิ์. สมเด็จฯ เจ้าฟ้ากรมพระยานริศรานุวัคติวงศ์ – "สมเด็จครู" นายช่างใหญ่แห่งกรุงสยาม.
  4. Kobkua Suwannathat-Pian (2003). Kings, Country and Constitutions: Thailand's Political Development, 1932-2000. RoutledgeCurzon. p. 245. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7007-1473-1.
  5. Crosbie-Jones, Max. "Book Talk: The Making of 'Prince Naris: A Siamese Designer'". 

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Narisara Nuwattiwong
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரிசாரா_நுவட்டிவாங்&oldid=3042776" இலிருந்து மீள்விக்கப்பட்டது