நந்தினி அரிநாத்
நந்தினி அரிநாத் (Nandini Harinath) இந்தியாவின் கருநாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இசுரோவின் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு) செயற்கைக்கோள் மையத்தில் ஏவூர்தி அறிவியலார் ஆவார்.[1] இவர் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தில் (மங்கள்யானின்) பங்கேற்றுள்ளார். பயணத் திட்டமிடல், பகுப்பாய்வு, செயல்பாடுகள் பற்றிய உட்கூறுகளின் உருவரை குறித்த ஆராய்ச்சிக் கட்டுரையை இவர் இணைந்து எழுதியுள்ளார். .
வாழ்க்கை
[தொகு]தொலைக்காட்சியில் புகழ்பெற்ற ஸ்டார் ட்ரெக் தொடர்தான் நந்தினிக்கு அறிவியலை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. இவரது தாயார் ஒரு கணித ஆசிரியர்; இவரது தந்தை ஒரு பொறியாளர். ஒரு குடும்பமாக இவர்கள் அனைவரும் அறிவியல் புனைகதை, ஸ்டார் ட்ரெக்கில் ஆர்வம் கொண்டிருந்தனர்.[2]
இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.[3]
தொழில் வாழ்க்கை
[தொகு]இசுரோவில் இவர் 20 ஆண்டுகளாகப் பணிபுரிகிறார். இந்த 20 ஆண்டுகளில் 14 பயணங்களில் பணியாற்றியுள்ளார்.[1] திட்ட மேலாளராகவும் திட்ட வடிவமைப்பாளராகவும் மங்கள்யான் எனும் செவ்வாய் சுற்றுகலத் திட்டத்தில் துணைச் செயல்பாட்டு இயக்குநராகப் பணியாற்றினார்.
வெளியீடுகள்
[தொகு]- நிலநடுக் கோட்டு இந்தியப் பெருங்கடலில் ஆண்டிடை மாறுபாடுகளைக் கவனிப்பதற்கான ஒரு பொறிமுறை[4]
- ரிசோர்சஸ்அட் - 1 பயணத் திட்டமிடல் பகுப்பாய்வு, செயல்பாடுகள் - முதன்மை உட்கூறுகளின் உருவரை[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "India's Rocket Women: Meet The Women Of ISRO – Rocket Women". rocket-women.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-04.
- ↑ "The women scientists who took India into space" (in en-GB). https://www.bbc.com/news/world-asia-india-38253471.
- ↑ "Meet the women behind Mangalyaan mission". Rediff. http://www.rediff.com/getahead/report/achievers-womens-day-2016-meet-the-women-behind-mangalyaan-mission/20160308.htm.
- ↑ 4.0 4.1 "Nandini Harinath - Publications". ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-04.