நந்தன் சார் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நந்தன் சார் ஏரி
Nandan Sar Lake
Lua error in Module:Location_map at line 502: "இந்தியா" is not a valid name for a location map definition.
அமைவிடம்பிர் பாஞ்சல் மலைத்தொடர், சம்மு காசுமீர், இந்தியா
வகைபனிநிலை ஏரி

நந்தன் சார் ஏரி (Nandan Sar Lake) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் அமைந்துள்ளது. முட்டை வடிவத்தில் உள்ள இது அல்பைன் ஏரி எனப்படும் பனிநிலை ஏரி வகையாகும். சம்மு காசுமீரின் பிர் பஞ்சால் மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 மீட்டர் உயரத்தில் நந்தன் சார் ஏரி அமைந்துள்ளது. [1] பூஞ்ச் மாவட்டத்தில் அதிகபட்சமாக 1 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள இந்த ஏரி அடர் நீல நிறத்திற்கு புகழ் பெற்றது. ஏரியின் நீர் யாதி மார்க் நுல்லாவிலிருந்து தொடங்கி ஓடி காசுமீர் பள்ளத்தாக்கில் பாய்கிறது. [2]

நந்தன் சார் ஏரியைப் பார்வையிடத் திட்டமிடும் பயணிகள் முதலில் கடல் மட்டத்திலிருந்து 3300 மீட்டர் உயரத்திலுள்ள அகல் தர்சினியின் சரிவில் ஏறி பின்னர் காசுமீர் நீர்நிலைக்கு இறங்க வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lakes of Pir Panjal- Rajouri". District Administration Rajauri.
  2. "Nandan Sar Lake, Rajouri". Native Planet.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தன்_சார்_ஏரி&oldid=3192350" இருந்து மீள்விக்கப்பட்டது