நத்தேனியேல் நைய்
நத்தேனியேல் நைய் (Nathaniel Nye) (பிறப்பு: 1624 – 1647 வரை) ஓர் ஆங்கிலேய வானியலாளரும் கணிதவியலாளரும் நிலப்பட வரைவாளரும் காலாட்படைக்கான துமுக்கி செய்பவரும் ஆவார்.
வாழ்க்கை
[தொகு]இவர் பிறப்பு 1624 ஏப்பிரல் 18 இல் பர்மிங்காம் சார்ந்த புல்ரிங்கில் உள்ள புனித மார்ட்டின் ஆலயத்தில் பதிவாகியுள்ளது. இவர் பர்மிங்காம், எடுவார்டு அரசர் பள்ளி ஆளுநரின் மகவாக இருக்க வாய்ப்புள்ளது.[1]
இவர்1642 ஆம் ஆண்டுக்கான புது அட்டவணையும் முற்கணிப்பும் நூலை வெளியிட்டார். இவர் வார்விக்சயரில் உள்ள புகழ்பெற்ற பர்மிங்காமின் நகரின் ஆயமுறைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளார். இதற்கு இவர் புவிமுனை தொடுவானத்துக்கு மேல் 52 பாகைகளும் 38 பாகைத்துளிகளும் மேல் உள்ளதாகக் கொண்டுள்லார். இந்த்க் கருதுகோள் அரசின் பகுதி முழுமைக்கும் பொருந்தும் எனவும் கூறியுள்லார். தன் நூல்வழி இவர் தனது நடைமுறைக்குத் தேவைபட்ட வானியல் புலமையை வெளிப்படுத்தினார்.[2]இந்நூலுக்கான அர்ப்பணிப்பு இவர் ஏற்கெனவே 1640 ஒரு விண்மீன் அட்டவணையைத் தன் 17ஆம் அகவையில் நெதர்லாந்து, ஆர்ன்கெம்மில் இருந்து வெளியிட்டிருக்கவேண்டும் என்பதைக் காட்டுகிறது.[3] அடுத்து இவர் 1643 இல் வெயிட்ட மற்றோர் அட்டணையில் இவர் தன் கணிதவியலாளரும் ந்டைமுறை வானியலாளர் என்பதையும் 1645 இல் மேலும் இரண்டு அட்டவணைகளை வெளியிடப்போவதாகவும் கூறியுள்ளார்..[1]
இவர் ஆங்கிலேய உள்நாட்டுப் போருக்கு வேண்டிய ஹுமுக்கியைச் செய்வதிலும் ஈடுபட்டார். அப்போது போரின் காரணமாக துமுக்கி வணிகம் பரவலாக இங்கிலாந்தில் குறிப்பாக பர்மிங்காம் நகரில் விளங்கியது. இவர் பைமிங்காம் துமுக்கி ஓர்வு 1643 இல் செய்யப்பட்டதையும் 1645 இல் டெரிட்டெண்டில் சாகர் வகைத் துமிக்கிகளின் செயல் வீளக்கத்தைத் தந்தமையையும் பதிவு செய்துள்ளார். [1]
இவர் ஆங்கிலேய உள்நாட்டுப் போருக்கு வேண்டிய துமுக்கியைச் செய்வதிலும் ஈடுபட்டார். அப்போது போரின் காரணமாக துமுக்கி வணிகம் பரவலாக இங்கிலாந்தில் குறிப்பாக பர்மிங்காம் நகரில் விளங்கியது. இவர் பைமிங்காம் துமுக்கி ஓர்வு 1643 இல் செய்யப்பட்டதையும் 1645 இல் டெரிட்டெண்டில் சாகர் வகைத் துமிக்கிகளின் செயல் வீளக்கத்தைத் தந்தமையையும் பதிவு செய்துள்ளார். [1]இவர் 1645 இல் எவெசாமில் இருந்த் இரவுண்டுகெடு நாடாளுமன்ற உறுப்பினரின் படைக்கிடங்கின் முதன்மை துமுக்கி பயிற்றுபவராக இருந்துள்ளார். இவர் 1646 இல் வெர்செசுட்டர் முற்றுகையில் காலாட்படையை வெர்றிகரமாக ந்டாத்தியுள்ளார். இந்தத் படைசார்ந்த பட்டறிவுகளை 1647 இல் வெளியிட்ட The Art of Gunnery என்ற நூலில் விவரித்துள்ளார்.[1] போர் என்பது அறிவியல் மட்டுமல்ல ஒரு கலையுங்கூட என கருதிய இவர்,[4] முக்கோன முறையிலும் எண்ணியல் முறையிலும் கோட்பாட்டு அறிவியல் முறையிலும் துமுக்கி இயக்க விளக்கங்களைக் கொடுத்துள்ளார். [5]இவர் நிலப்ப்ப்படம் வரைவதிலும் வல்லவர் ஆவார்.[1] மேலும்,இவர் துமுக்கி வெடித்தூளுக்கும் மெல்ல எரியும் தீக்குச்சிக்கும் தேவையான குறிப்பீடுகளை வகுப்பதிலும் வல்லவராக இருந்துள்ளார்.[6] மேலும், இவரது நூல்ஐராபெர்ட்டு இர்க்கார்டே, மார்க்கசு யோர்டானசு ஆகிய கணிதவியலாலர்களை அறிமுகப்படுத்துவதோடு காலாட்படைத்துறை எழுத்தாளர்களாகிய நிகொலோ தார்த்தகிலியா, தாமசு மால்தசு ஆகியோரின் நூல்கலையும் அறிமுகப் படுத்துகிறது.[1]
நையின் வாழ்க்கையைப் பற்றிய தகவல் 1647 ஆம் ஆண்டுக்குப் பிறகு எதுவும் தெரியவில்லை. என்றாலும், The Art of Gunnery நூலின் அடுத்த பதிப்புகள் 1648 இல்மு 1670 இலும் வெளியிடப்பட்டன.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Porter 2008
- ↑ Hill 1907, ப. iv
- ↑ Hill 1907, ப. vi
- ↑ Donagan 2008, fig 8
- ↑ Donagan 2008, ப. 84
- ↑ Donagan 2008, ப. 85
நூல்தொகை
[தொகு]- Donagan, Barbara (2008), War in England 1642-1649, Oxford: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-928518-1, பார்க்கப்பட்ட நாள் 2009-08-09
- Hill, Joseph (1907), The book makers of old Birmingham: authors, printers, and book sellers, New York: B. Franklin (published 1971), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8337-1706-5
- Porter, Stephen (2008), "Nye, Nathaniel (bap. 1624), mathematician and master gunner", Oxford Dictionary of National Biography (Online ed.), Oxford University Press, பார்க்கப்பட்ட நாள் 2009-08-09