நடுகை (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடுகை இலங்கை, யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலிருந்து வெளிவந்த இருமாத கவிதை இதழாகும். இதன் முதல் இதழ் மாசி, பங்குனி 2004ல் வெளிவந்துள்ளது.

நிர்வாகம்[தொகு]

ஆசிரியர்கள்[தொகு]

  • த.பிரபாகரன்
  • கூ லக்ஸ்மணன்

முகவரி[தொகு]

305, பலாலி வீதி, யாழ்ப்பாணம்

உள்ளடக்கம்[தொகு]

இதன் முதல் இதழில் ஆசிரியர் தலைப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது உங்களுக்கான வயல். கவிதைக்கான ஒரு காகித விதைவு எனும் மகுடத்தோடும், இரு திங்கள் இதழாக நடுகை துளிர்விடுகின்றது. கவிதைகள், கவிதை சார் விமர்சனங்கள், விவாதங்கள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள், தகவல்கள் என பலதரப்பட்ட விடயங்களை எல்லோருமாய் பகிர்ந்து ரசிக்கின்ற இடமாக நடுகை விளங்கும். இந்த ஆசிரியர் தலைப்புப் பகுதியிலிருந்து இவ்விதழின் நோக்கத்தையும், உள்ளடக்கத்தையும் புரிந்துகொள்ள முடியும். இவ்விதழ் 12 பக்கங்களைக் கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுகை_(இதழ்)&oldid=785966" இலிருந்து மீள்விக்கப்பட்டது