நசிரீன் பர்வின் அக்
நசிரீன் அக் | |
---|---|
![]() Photograph of subject of biography | |
பிறப்பு | நவம்பர் 18, 1958 வங்கதேசத்தவர் |
இறப்பு | 24 ஏப்ரல் 2006 வங்காளதேசம் | (அகவை 47)
தேசியம் | வங்கதேசத்தவர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | பர்ச்சேஸ் எஇயூயார்க் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
பணி | ஆக்சன் எயிட் திட்ட இயக்குநர் |
நசிரீன் பர்வின் அக் (Nasreen Pervin Huq; பிறப்பு18 நவம்பர் 1958 - 24 ஏப்ரல் 2006 வங்கதேசம்) வங்காளதேசத்தைச் சேர்ந்த முக்கிய பெண் ஆர்வலரும், பெண்கள் உரிமைகளுக்கும் சமூக நீதிக்கும் குரல் கொடுக்கும் பிரச்சாரகரும் ஆவார். டாக்காவில் உள்ள இவரது வீட்டில் நடந்த ஒரு விபத்தில், இவர் ஒரு வாகனத்தால் கொல்லப்பட்டார். இங்கிலாந்தின் ஆக்சன் எயிட் என்ற அரசு சாரா நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றி வந்த இவர் வேலைக்குச் செல்ல இவரை அழைத்துச் சென்ற இவரது ஓட்டுநரால் வாகனம் ஓட்டப்பட்டது. இவரது மரணம் தற்செயலானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது என்றாலும், சிலர் வாகன ஓட்டுநருக்கு வெளிநாட்டு நபரால் பணம் செலுத்தப்பட்டதாக நினைக்கிறார்கள்.[1] [2] [3]
ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]
நசிரீன் வங்காளதேசத்தில் ஒரு முக்கிய குடும்பத்தில் பிறந்தார்; இவரது தந்தை, இரபிகுல் அக், ஒரு பொறியாளராவார். இவரது தாயார், ஜஹேதா கானும், கவிஞரும், கவிதை மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவரது ஆரம்பக் கல்வி வங்கதேசத்தில் உள்ள ஒரு கத்தோலிக்க மறை பள்ளியில் (ஹோலி கிராஸ் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரி) இருந்தது. டெக்சாஸின் டல்லாஸில் உள்ள தனியார் பெண்கள் பள்ளியான தி ஹொக்கடே பள்ளிக்கு இவரது பெற்றோர் இவரது இளம் வயதில் அனுப்பினர்.
பர்சேஸில் நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தில் உயிரியலில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, இவர் ஊட்டச்சத்து துறையில் கவனம் செலுத்தினார். மேலும், பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அங்குள்ள ஆசிரியர்களில் ஒருவர் இவரை "வரம்பற்ற ஆற்றல், உற்சாகம் மற்றும் இலட்சியவாதம் கொண்ட ஒரு பெண்" என்று விவரித்தார். தனது படிப்பை முடித்த பிறகு, பல வெளிநாட்டிலுள்ள வங்களாதேசத்தவர்களைப் போலல்லாமல், அமெரிக்காவில் குடியேறாமல் நாடு திரும்ப முடிவு செய்தார். ஏனென்றால் தான் தேசிய வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்று உணர்ந்தார். பின்னர். இவர் தனது குடும்பத்துடன் வசிக்கும் ஒரு வங்கதேச குழந்தையை தத்தெடுத்தார்.
வங்காளதேசத்தில் செயல்பாடுகள்[தொகு]
1988 இல் டாக்காவுக்குத் திரும்பியதும் நசிரீன் அக் வங்காளதேச கிராமப்புற முன்னேற்றக் குழுவில் பணி செய்ய நியமிக்கப்பட்டார். இப்போது அதன் சுருக்கத்தால் அறியப்பட்ட, BRAC (வங்காளதேசம் ஊர் முன்னேற்ற செயற்குழு ) வறுமையை ஒழித்து ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனங்களில் ஒன்றாகும். இவர் இந்த குழுவின் ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டுப் பிரிவில் சேர்ந்தார். மேலும் அதன் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களை ஆதரித்து தனது பணி வாழ்க்கையைத் தொடங்கினார். 1992ஆம் ஆண்டில் இவர் அமெரிக்காவின் ஹெலன் கெல்லர் சர்வதேச நிறுவனத்தின் கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மேலும், ஒரு தேசிய ஊட்டச்சத்து கண்காணிப்பு திட்டத்துக்கும்,ம் ஒரு புதுமையான வீட்டு தோட்டத் திட்டத்திற்கும் பங்களித்தார். 2002ஆம் ஆண்டில் இவர் நிறுவனத்தை விட்டு வெளியேரி வங்காளதேசத்தில் ஆக்சன் எயிட் திட்டத்தின் இயக்குனராக பொறுப்பேற்றார். இந்த வேலைக்கு இவர் மிகவும் பொருத்தமாக இருந்தார். ஏனெனில் நிறுவனம் ஆரோக்கியம், வளர்ச்சி மற்றும் சமூக நீதி ஆகிய திட்டங்களை கொண்டுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ கடமைகளுடன் இவர் பெண்களின் உடல்நலம் மற்றும் உரிமைகள் துறையில் பல தேசிய நிறுவனங்களுக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் பங்களித்தார். இவர் வங்காளதேச அரசாங்கத்தின் பாலின பிரச்சினைகள் குறித்து ஒரு வழக்கமான ஆலோசகராக இருந்தார். இவர் டாக்காவில் உள்ள சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார். இவர் வங்காளதேச மனித உரிமைகள் மற்றும் நிர்வாகத் திட்டத்தின் உறுப்பினராக இருந்தார். இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த உலக சுகாதார அமைப்பின் பிராந்திய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார். மேலும் இவர் பெண்கள் மற்றும் உடல்நலம் குறித்த ஆசிய பசிபிக் ஆராய்ச்சி மற்றும் வள மையத்தின் திட்ட ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.[4]
அஞ்சலி[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Obituary: Nasreen Huq". the Guardian.
- ↑ "The Daily Star Web Edition Vol. 5 Num 677". thedailystar.net.
- ↑ http://www.thedailystar.net/magazine/2006/05/01/tribute.htm
- ↑ "Archived copy". 24 July 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 June 2007 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)