நங்கூரச் செடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நங்கூரச் செடி[தொகு]

வகைப்பாடு[தொகு]

கோல்லிட்டியா குருசியேடா -நங்கூரச் செடி

தாவரவியல் பெயர் : கோல்லிட்டியா குருசியேடா Colletia cruciata

குடும்பம் : ராம்னேசியீ (Rhamnaceae)

இதரப் பெயர் : நங்கூரச் செடி (Anchor plant)

செடியின் அமைவு[தொகு]

இச்செடி மிகவும் ஆச்சரியமானது. இது 3 முதல் 4 அடி உயரம் வளரக் கூடியது. இதன் விநோதமான தோற்றத்தால் இதை வீடுகளில் வளர்க்கிறாறார்கள். இதனுடைய கிளைகள் பட்டையாகவும் இதிலிருந்து வரும் முற்களும் பட்டையாகவும், முக்கோண வடிவத்திலும் இருக்கும். இது உண்மையில் மாற்றம் அடைந்த தண்டுகளே. இவற்றில் வரும் முற்கள் ஜோடி ஜோடிகளாக இருக்கும். மேலும் சரியாக கோணத்தில் ஒன்றோடு ஒன்று அருகில் உள்ளது. முற்கள் மிகக் கூறாக இருக்கும். முள்ளின் அடிப்பகுதியில் மிகச்சிறிய இலைகள் உள்ளது. இது உதிரக் கூடியது. இந்த முற்களின் அடிப்பகுதியில் சிவப்புபூக்கள் உள்ளன. இவை குழாய் வடிவிலும், வெளுத்த மஞ்சள் நிறத்திலும் இருக்கிறது. இச்செடியை முதல் முதலில் பிரஞ்சு தாவரவியல் அறிஞர் பிலிபர்ட் கொல்ட் (1643-1718) என்பவர் விளக்கினார். இதனால் இச்செடிக்கு இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இச்செடி தெற்கு பிரேசில் மற்றும் உருகுவே நாடுகளில் வளர்கிறது.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நங்கூரச்_செடி&oldid=2749228" இருந்து மீள்விக்கப்பட்டது