நகர்வுச் சுதந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நகர்வுச் சுதந்திரம், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கான உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை என்பன மனித உரிமைகளாகக் கருதப்பட்டுப் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் கூட இடம் பெற்றுள்ளன. இது ஒரு நாட்டின் குடிமக்கள் அந்த நாட்டைவிட்டு வெளியேறுதல், எங்கே அனுமதிக்கப்படுகிறார்களோ அங்கு பயணம் செய்தல், உரிய ஆவணங்களுடன் எந்நேரமும் நாட்டுக்குத் திரும்பி வருதல் என்பவற்றுடன், குறித்த நாட்டுக்குள்ளேயே தாம் விரும்பிய எந்த இடத்துக்குச் செல்வதற்கும், வாழ்வதற்கும், அங்கே வேலை செய்வதற்குமான உரிமைகளைக் குறிக்கிறது. இது அடிப்படை மனித உரிமையாக சிலரால் கருதப்படும் ஒரு சுதந்திரம் ஆகும். நாடுகளுக்கிடையே பயணம் செய்வதற்கும் வசிப்பதற்குமான முழுமையான சுதந்திரம் பெரும்பான்மையானோருக்கு இல்லை. இத்தகைய சுதந்திரம் வேண்டும் என்று சில அமைப்புகள் வலியுறுத்தி வந்த போதிலும், அந்தக் கோரிக்கைக்கு ஒரு நாட்டினதும், பன்னாட்டு அமைப்புகளினதும் ஆதரவு இல்லை. வெவ்வேறு வாழ்தரம் உள்ள நாடுகள், கீழ் வாழ்தரம் உள்ள நாடுகளில் இருந்து குடிவரவை விரும்பவதில்லை. முழுமையான சுதந்திரம் இருந்தால், நிலையான நிர்வாகம் செய்வதும் கடினாமக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

ஒரு குடிமை நாட்டுக்குள்ளேயே நகர்வதற்கு பெரும்பான்மை நாடுகளில் சுதந்திரம் உண்டு. எனினும் பல நாடுகளில் இச்சுதந்திரமும் இல்லை. குறிப்பாக சீனாவில் ஒரு கிராமத்தார் நகரத்துக்கு சுதந்திரமாக அனுமதி இன்று நகர முடியாது.

நகர்வு சுதந்திரம் என்பது ஒரு தனிப்பட்டவரின் இடத்துக்குள் செல்வதற்கான சுதந்திரம் என்று பொருள் படாது.

இவற்றையும் பாக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகர்வுச்_சுதந்திரம்&oldid=3645076" இலிருந்து மீள்விக்கப்பட்டது