த 15:17 டு பாரிஸ்
த 15:17 டு பாரிஸ் The 15:17 to Paris | |
---|---|
இயக்கம் | கிளின்ட் ஈஸ்ட்வுட் |
தயாரிப்பு |
|
மூலக்கதை | ‘த 15:17 டு பாரிஸ்: எ ட்ரூ ஸ்டோரி ஆஃப் எ டெரரிஸ்ட், எ ட்ரெய்ன் அண்ட் திரீ அமெரிக்கன் ஹீரோஸ்’ என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டது |
திரைக்கதை | டோரதி ப்ளஸ்ஸ்கால் |
இசை | கிரிஸ்டின் ஜேக்கப் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | டாம் ஸ்டெர்ன் |
படத்தொகுப்பு | ப்ளூ முர்ரே |
கலையகம் |
|
விநியோகம் | வார்னர் புரோஸ். எண்டர்டெய்ன்மெண்ட்[1] |
வெளியீடு | பெப்ரவரி 9, 2018(United States) |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
த 15:17 to டு பாரிஸ் (The 15:17 to Paris) என்பது உண்மைக் கதையை அடிப்படையாக கொண்ட ஒரு அமெரிக்கத் திரைப்படமாகும். இதை கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கியுள்ளார். தீவிரவாதியை எதிர்கொண்டு சாதித்த மூன்று அமெரிக்க இளஞர்களின் உண்மைக் கதையை அடிப்படையாக்கி வெளிவந்த ‘த 15:17 டு பாரிஸ்: எ ட்ரூ ஸ்டோரி ஆஃப் எ டெரரிஸ்ட், எ ட்ரெய்ன் அண்ட் திரீ அமெரிக்கன் ஹீரோஸ்’ என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் சிறப்பு அம்சமாக இந்த சாகச நிகழ்வில் பங்கேற்ற, ஆண்டனி சாட்லெர், அலெக் ஸ்கர்லடஸ், ஸ்பென்சர் ஸ்டோன் ஆகிய மூன்று அமெரிக்க வீரர்களையே அவர்களின் உண்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2]
இந்த படம் 2018 பிப்ரவரி 9 அன்று வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் வெளியிட்டவிருக்கிறது.
கதை
[தொகு]பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் வழியாக, 2015, ஆகத்து 21 அன்று பாரீசுக்கு செல்லும் அதிவிரைவு ரயிலில் ஐ.எஸ். தீவிரவாதி ஒருவனும் பயணிக்கிறான். ஓடும் தொடர்வண்டியில் 500-க்கும் மேற்பட்ட பயணிகளை கொல்வதற்கான சதித்திட்டத்தை செயல்படுத்த தயாராகிர்றான். இதற்காக வெடிப் பொருட்கள் மற்றும் தானியங்கி துப்பாக்கியுடன் அவன் செயல்படத் தொடங்குகிறான். அப்போது அந்த தொடர்வண்டியில் பயணிக்கும் மூன்று அமெரிக்க இளைஞர்கள் தீவிரவாதிக்கு எதிராக போராடுகின்றனர். அடிப்படையில் இராணுவ வீரர்களான அம்மூவரும் தீவிரவாதியை எதிர்கொண்டு சாதித்த உண்மைச் சம்பவமே கதையின் அடிப்படை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Film releases". Variety Insight. பார்க்கப்பட்ட நாள் 26 October 2017.
- ↑ எஸ்.எஸ்.லெனின் (6 சனவரி 2018). "87 வயது இயக்குநரின் படம்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2018.