த சிக்ஸ்த் சென்ஸ்
த சிக்ஸ்த் சென்ஸ் | |
---|---|
இயக்கம் | எம். நைட் ஷியாமளன் |
தயாரிப்பு | சாம் மெர்செர் பிராங் மார்ஷல் |
கதை | எம். நைட் ஷியாமளன் |
நடிப்பு | புரூஷ் வில்லிஸ் டோனி கோலெட்டே ஒலிவியா வில்லியம்ஸ் ஹாலெ ஜோல் ஓஸ்மெண்ட் |
விநியோகம் | புவெனா விஸ்டா இண்டர்நேஷனல் |
வெளியீடு | ஆகஸ்ட் 2, 1999 |
ஓட்டம் | 107 நிமிடங்கள் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | 55 மில்லியன் அமெரிக்க டாலர்கள் |
த சிக்ஸ்த் சென்ஸ் (The sixth sense, ஆறாம் அறிவு) 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். எம். நைட் ஷியாமளன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் புரூஸ் வில்லிஸ், ஹாலே ஜோல் ஓஸ்மெண்ட் மற்றும் பலரும் நடித்துள்ளன்ர.
வகை
[தொகு]கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
மனோதத்துவ மருத்துவரான மால்கொம் குரோவ் (புரூஷ் வில்லிஸ்) மனநிலை பாதிக்கப்பட்டவெரனக் கருதப்படும் கோலிற்கு (ஹாலே ஜோல் ஓஸ்மெண்ட்) மருத்துவம் பார்ப்பதற்காகச் செல்கின்றார். அங்கு கோலும் தனக்கு இறந்த மனிதர்களுடன் தொடர்புள்ளதாகவும் அவர்களைத் தன்னால் அவதானிக்க முடிகின்றதெனவும் கூறுகின்றான். இவற்றைக் கேட்கும் குரோவும் அதிசயப்படுகின்றார். அதே சமயம் குரோவ் தன்னை நோக்கி ஆயுதம் ஏந்தி சுட வந்த நிர்வாண மனிதனைப் பற்றியும் நினைத்துக் கொள்கின்றார். கோளிற்கு ஆவியாகக் கருதப்படும் பெண்ணொருவருடன் தொடர்பு ஏற்படுகின்றது, அது தான் எவ்வாறு தனது தாயாரினால் விசம் வைத்துக்கொலை செய்யப்படுகின்றேன் என்பதனை விளக்கிக் கூறுகின்றது. இச்சம்பவத்தினை கோல் தனது தாயாருக்கு விளக்கும் சமயம் தாயார் ஆவிகள் வெறும் கட்டுக்கதை என நம்பமறுக்கின்றார். இருப்பினும் கோல் தனது தாயாரின் தாய் ஒருமுறை தாயாரின் நடனத்தினை மேடையில் கண்டுகளிக்க வந்துள்ளார் எனக்கூறவும் கோலின் தாயாரும் தனது மகனிடம் அரிய சக்தி இருப்பதனை உணர்கின்றார். கோலிற்கு வைத்தியம் பார்க்க வந்த குரோவும் தனது மனைவியடம் சென்று பேசச்சொல்லும் கோலின் சொற்கேட்டு அங்குசெல்லும் செல்கின்றார். அங்கு அவர் மனைவி நிகழ்படபிரதியினைப் பார்க்கும் சமயம் அப்பிரதியில் குரோவ் சுட்டு வீழ்த்தப்பட்டது புரிகின்றது. பின்னர் அவரும் ஒரு ஆவி என்பதே திரைக்கதையின் முடிவாகும்.
வசூல்
[தொகு]- அமெரிக்காவில் - 293,501,675 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
- உலகளவில் - 672,806,292 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
துணுக்குகள்
[தொகு]- உலகில் அதிக வசூல் சாதனையைனைப்பெற்ற திரைப்படங்கள் வரிசையில் 23 ஆம் இடத்தில் இத்திரைப்படம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இத்திரைப்படம் 6 ஆஸ்கார் விருதுகளிற்குப்பரிந்துரைக்கப்பட்டது.