தோரோங் லா கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தோரோங் லா-வின் உச்சி

தோரோங் லா (Thorong La) கணவாய் 5,416 மீட்டர்கள் (17,769 அடிகள் ) உயரத்தில் இமயமலைத் தொடரில் நேபாளம் பகுதியில் அமைந்துள்ளது. இது மனாங் என்ற கிராமத்தை ரானிபெளவா என்ர கிராமத்தோடு இணைக்கிறது. இந்தக் கணவாய் உள்ளூர் வணிகர்கள் அடிக்கடி பயன்படுத்தும் பாதையாகும்.

காலநிலை[தொகு]

இதன் மேற்குப் பக்கம் கிழக்குப் பக்கத்தைவிட வறட்சியாகவே காணப்படும். மேற்குப் பகுதியில் இயற்கையாய் வளரும் தாவரங்கள் எதுவும் இல்லை. ஆனால் கிழக்குப் பகுதியான மனாங் கிராமத்தில் தாவரங்கள் வளருவதற்கான சூழல் நிலவுகிறது.

சுற்றுலா[தொகு]

அன்னபூர்ணா 1 பகுதியின் உயரமான இடம் இதுவாகும். இங்கு மலையேறம் செய்பவர்கள் அதிகம் வருகின்றனர். மார்ச், ஏப்ரல் மற்றும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மலையேறுவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. குளிர்காலத்தில் இந்த இடத்தைக் கடப்பது அபாயகரமான ஒன்று. அதிகமான சுற்றுலாப் பயணிகள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி இஃதக் கணவாயைக் கடக்கின்றனர். ஏனெனில் அதுதாம் எளிமையானதும் பாதுகாப்பானதும் ஆகும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மலையேறச் செல்பவர்கள் இதை சூரிய உதயத்திற்கு 5 மணிநேரம் முன்பாகவே கடக்கின்றனர். ஏனெனில் இந்த மாதங்களில் சூரிய உதயத்திற்குப் பின் கடுமையான காற்று வீசுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரோங்_லா_கணவாய்&oldid=2199681" இருந்து மீள்விக்கப்பட்டது