உள்ளடக்கத்துக்குச் செல்

தொழில்நுட்பக் குவிதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழில்நுட்பக் குவிதல் (Technological convergence) என்பது முன்பு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தொழில்நுட்பங்கள் மிக நெருங்கி ஒருங்கிணைந்து மேலும் வளரும்போது ஒருமித்து உயர்தொழில்நுட்பமாக முன்னேறுதலைக் குறிக்கும் இது உயிரியலின் குவிநிலைப் படிமலர்ச்சியை ஒத்த கருத்தாகும். திமிங்கலங்கள் அதாவது மீனாக விட்டாலும் மீனின் கால்வழியில் இருந்து தோன்றாவிட்டாலும் அவற்றின் மூதாதைகள் படிப்படியாக செயலிலும் வடிவத்திலும் மீன் போலவே படிமலர்ந்ததை ஒத்ததாகும். தொழில்நுட்பக் குவிதலில், இந்தக் கருத்துப் படிமத்துக்கான சரியான எடுத்துகாட்டாக, தொலைபேசி, தொலைக்காட்சி, கணினி ஆகியவை முதலில் ஒன்றுக்கொன்று தொடர்பேதும் இல்லாமல் தனித்தனியாக தோன்றிய தொழில்நுட்பங்கள் ஆனாலும் இவை பலவழிகளில் குவிந்து பிறகு ஊடக, தொலைத்தொடர்புத் தொழில்துறையில் மென்பொருள், இலக்க மின்ன்னியல் வழியாக ஒன்றோடொன்று உறவு பூண்டதைக் குறிப்பிடலாம்.

வரையறைகள்

[தொகு]

"குவிதல் (Convergence) என்பது ஒரு பொது இலக்கிற்காக, மாந்த அறிவின் கருவிகளின் அவற்றைச் சார்ந்த செயல்பாடுகளின் ஆழ்நிலை ஒருங்கிணைவாகும். இது சமூகம் புதிய புற, சமூகச் சூழலை மாற்றுவதற்கான கேள்விகளூக்கு விடை காணும்போது ஏற்படும் தீர்வாக அமைகிறது. குறிப்பிட்ட சுழலமைப்பில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள், பின்வரும் விரிநிலைக் கட்ட நிகழ்வில் புதிய போக்குகளையும் வழித்தடங்களையும் வாய்ப்புகளையும் திறக்கின்றன." (Roco 2002,[1] Bainbridge and Roco 2016 [2]).

பன்கருவி அல்லது பல்லுளி எனும் குவிதலுற்ற எந்திரக் கருவி அல்லது உளி, ஒரே ஏற்பாட்டமைவுக்குள் பல கருவிகளை அல்லது உளிகளை அமைக்கிறது.

சித்தார்த்த மேனன் ஊடகக் குவிதலில் கொள்கை முன்முயற்சி முரண்கள்: ஒரு தேசிய ஊடாட்டக் கண்ணோட்டம் எனும் தன் நூலில் குவிதலை ஒருங்கிணைவும் இலக்க மயமாக்கமுமாக வரையறுக்கிறார். இங்கு ஒருங்கிணைதல் என்பது " பேசி, தரவு ஒலிபரப்பல், தகவல் தொழில்நுட்பம் போன்ற வேறுபாட்ட ஊடகங்களின் அகக்கட்டமைப்புகள் பிரிவின்றி அனைத்து நோக்க இலக்குகளும் நிறைவேறும் ஒற்றை வலிக் கட்டமைப்பாக இணைந்து உருமாறும் நிகழ்வுத் தளம்" என வரையறுக்கப்படுகிறது.[3] இலக்க மயமாதல் என்பது அதன் ஒற்றைப் புறநிலைக் கட்டமைப்பால் வரையறுக்கப்படாமல், அதன் உள்லடக்கம் அல்லது ஊடகத்தால் வரையறுக்கப்படுகிறது. ஜான் வான் தியிக் " இலக்கமாக்கம் குறிகைகளை சுழி, ஒன்று வழி அலகுகளாக்கல்" எனப் பரிந்துரைக்கிறார்.[4][5] பிளாக்மன் 1998 இல் குவிதல் என்பது தொழில்நுட்பச் சேவைகள், தொழில்துறை கட்டமைப்புகளின் படிமலர்ச்சியின் ஒரு போக்காகும் என வரையறுக்கிறார்.[6] குவிதல் என்பது தொலைத்தொடர்புகள், கணிப்பு, பரப்பல் ஆகியவை ஒன்றாக இணைந்து ஒற்றை எண்மச் சரமாதல் என வரையறுக்கப்படுகிறது.[7][8][9][10][11]

தொழில்நுட்பக் குவிதலின் கூறுகள்

[தொகு]

தொழில்நுட்பக் குவிதலில் பின்வரும் ஐந்து கூறுகள் அமைகின்றன:

[1] தொழில்நுட்பம்: இது ஒத்த தன்மைகளை உருவாக்க இயலாதனவாக்க் கருதப்படும் தொழில்நுட்பவியல்களின் பொதுவானதான கூறுபாடாகும். ஆனால் நாளடைவில் இந்த வேற்றுமைகள் மழுங்கிப் போகின்றன. 1995 ஆம் ஆண்டளவில் தொலைக்காட்சியும் நகர்பேசியும் முற்ரிலும் தனித்த கருவிகளாக விளங்கின. அண்மைக் காலத்தில் இவை இரண்டுமே அகல்பட்டை இணையத்தால் ஒன்றோடொன்று இணைந்து இணைய ஊடகமாகி பல்வேறு பயன்மென்பொருள்களை இயக்குகின்றன. இப்போது மக்கள் தம் பேசியில் இருந்தோ தொலக்காட்சியில் இருந்தோ ஒரு விளையாட்டை விளயாடவோ உறவினருடன் பேசவோ ஒரே மென்பொருள் வழியாக முடிகிறது.

[2] ஊடகமும் உள்ளடக்கமும்: முன்பு தனியாக இருந்த தொலைக்காட்சியும் இணையமும் இப்போது ஒருங்கிணைந்துவிட்டன. எனவே, இன்று தம் தனித்த வடிவங்களை இழந்து இசையும் திரைப்படமும் காணொலி விளையாட்டுகளும் தகவல் உள்ளடக்கங்களும் வேற்பாடு ஏதும் இல்லாமல் ஒன்றிவிட்டன. எடுத்துகாட்டக எதிர்கால இசை விளையாட்டுபோல தோன்றும் இசைக் காணொலியாகவே அமையும்.

[3] சேவைகளின் பயன்பாடு: 1990 களின் பிற்பகுதியில் வணிக, நுகர்வு மென்பொருள்களுக்கும் சேவைகளுக்கும் இடையில் பெருத்த வேறுபாடு நிலவியது. நாளடைவில் இந்தப் பிரிகோடு மறையலானது. தொழில்நுட்பம் பல உயர்தனித்தன்மை வாய்ந்த கருவிகளில் இருந்து. பல பயன்பாடுகளைச் செய்யவல்ல சில நெகிழ்தகவான சிறிய கருவிகளால் ஆனதாக மாறிவிட்டது.

[4] மனிந்திரங்களும் எந்திரங்களும்: இன்று ஊர்திகளும் பயன்கருவிகளும் பகுதி தன்னியக்க இயல்புகளைப் பெற்றுள்ளதால் அவை நுட்பமான மனிந்திரங்களாகி விடுகின்றன.

[5] மெய்நிகர் நிலவுகை: இது இயல்வாழ்வு இணைய உறுப்படிகளும் இணைந்த விளையாட்டு, தகவல் சேவைகள் அமைந்த மெய்நிகர் உலகைக் குறிக்கிறது.

ஊடகத் தொழில்நுட்பக் குவிதல்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. Roco, MC (2002). "'Coherence and divergence of megatrends in science and engineering". J Nanopart Res 4: 9–19. doi:10.1023/A:1020157027792. 
 2. Bainbridge, W.S.; Roco, M.C. (2016). "'Science and technology convergence: with emphasis for nanotechnology-inspired convergence". J. Nanoparticle Res. 18 (7): 211. doi:10.1007/s11051-016-3520-0. 
 3. Siddhartha, 2
 4. Van Dijk, J. (1999). The network society. London: Sage Publications.
 5. Menon, Siddhartha. "Policy Initiative Dilemmas On Media Convergence: A Cross National Perspective." Conference Papers – International Communication Association (2006): 1–35. Communication & Mass Media Complete. Web. 20 Nov. 2011.
 6. Blackman, C (1998). "Convergence between telecommunications and other media: how should regulation adapt?". Telecommunication Policy 22 (3): 163–170. doi:10.1016/s0308-5961(98)00003-2. 
 7. Collin, 1998; Gates, 2000
 8. Conlins, R (1998). "Back to the future: Digital Television and Convergence in the United Kingdom". Telecommunication Policy 22 (4–5): 383–96. doi:10.1016/S0308-5961(98)00022-6. 
 9. Gate, A (2000). "Convergence and competition: Technological change, industry concentration and competition policy in the telecommunications sector". University of Toronto Faculty of Law Review 58 (2): 83–117. 
 10. Mueller, 1999, p. 2
 11. Mueller, M (1999). "Digital Convergence and its consequences". Javnost/The Public 6 (3): 11–27. doi:10.1080/13183222.1999.11008716. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழில்நுட்பக்_குவிதல்&oldid=2873025" இலிருந்து மீள்விக்கப்பட்டது