தொழிலாளர் முன்னேற்ற சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழிலாளர் முன்னேற்ற சங்கம் என்பது தமிழ்நாட்டிலுள்ள ஒரு தொழிற்சங்கமாகும். அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிற்சங்க அமைப்பாக இது உள்ளது. இத்தொழிற்சங்கம் தமிழ்நாட்டில் அதிகமான தொழிலாளர்கள் உடைய பல நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் கிளைகளைக் கொண்டுள்ளது. இத்தொழிற்சங்கத்தில் மாவட்ட வாரியாகவும், துறைகள் வாரியாகவும் சில பிரிவுகளும் உள்ளன.