உள்ளடக்கத்துக்குச் செல்

தொல்புவியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொல்புவியியல் வல்லுநர்கள் மத்திய தெவோனியன் காலத்தில் புனரைப்பு செய்த அப்பலாச்சியன் வடிநிலப் பரப்பை படம் காட்டுகிறது[1]

தொல்புவியியல் (Palaeogeography) என்பது வரலாற்று புவியியலின் பண்டைய வரலாற்றை பொதுவாக இயற்கை நிலப்பரப்புகளைப் பற்றி படிக்கின்ற அறிவியலாகும். மனிதன் அல்லது கலாசார சூழல்களைப் பற்றிய ஆய்வுகளும் தொல்புவியியலில் அடங்கும். குறிப்பாக நிலப்பரப்புகளை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்தும் தொல்புவியியல் சில சமயங்களில் தொல்நிலப்பரப்பியல் என்ற சொல்லாலும் அழைக்கப்படுகிறது.

விஞ்ஞானப் புரிதல்களுக்கு நெருக்கடியான தகவல்களையே பலவிதமான சூழல்களில் தொல்பொருளியல் துறை அளிக்கிறது. உதாரணமாக, வண்டல் மண்ணியல் பற்றிய புவியியல் பகுப்பாய்வு பெட்ரோலியப் புவியியல் துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனென்றால் பூமி மேற்பரப்பின் தொல் புவிப்பரப்பியல் சூழல்கள் பாறைப்படிவியல் பதிவுகளில் பாதுகாக்கப்படுகின்றன. தொல்புவியியல் வல்லுநர்கள் கூட புதைப்படிவுகளுடன் தொடர்புடைய வண்டல் சூழலை ஆய்வு செய்கின்றனர். அழிந்து வரும் இனங்களின் பரிணாம வளர்ச்சிக்கு சான்றுகள் கிடைக்கும் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றனர். மற்றும் தொல்புவியியல் ஆதாரங்கள் கண்டப்பெயர்ச்சி கோட்பாட்டு வளர்ச்சிக்கு உதவியாக இருந்தன. தொடர்ந்து தற்போதைய தட்டுப் புவிப்பொறை கட்டமைப்பு கோட்பாடுகளுக்கு உதவியும் வருகின்றன. மேலும் ஒருநிலக் கொள்கையால் சுட்டப்படும் மீகண்டங்களின் பண்டைய வடிவம் மற்றும் நிலப்பரப்பு பற்றிய தகவலை வழங்குவதுடன், பாந்தசாலாசா போன்ற பண்டைய கடல்களைப் பற்றியும் தெரிவிக்கின்றன. இதனால் வரலாற்றுக்கு முந்தைய கண்டங்கள் மற்றும் கடல்களின் வரலாறுகளை புனரமைப்பு செய்யமுடிகிறது.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Blakey, Ron. "Paleogeography and Geologic Evolution of North America". Global Plate Tectonics and Paleogeography. Northern Arizona University. Archived from the original on 2008-06-21. பார்க்கப்பட்ட நாள் 2008-07-04.

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Palaeogeography
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்புவியியல்&oldid=3847481" இலிருந்து மீள்விக்கப்பட்டது