உள்ளடக்கத்துக்குச் செல்

தொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை
உடன்படிக்கை நடைமுறையில் உள்ள நாடுகள் (இளம்பச்சை: உடன்படிக்கை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை)
கையெழுத்திட்டது17 அக்டோபர் 2003
இடம்பாரிசு
நடைமுறைக்கு வந்தது20 ஏப்ரல் 2006
நிலை30 ஏற்புறுதிகள்
அங்கீகரிப்பவர்கள்171[1]
வைப்பகம்யுனெசுக்கோ பணிப்பாளர்
மொழிகள்அரபு, சீனம், ஆங்கிலம், பிரான்சியம், உருசியம், எசுப்பானியம்

தொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை (Convention for the Safeguarding of the Intangible Cultural Heritage ) என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் ஒர் உடன்பாடு ஆகும். இந்த உடன்படிக்கை 2006 இல் அமுலுக்கு வந்தது. 2016 செப்ரம்பரில் 171 உறுப்பு நாடுகள் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன.

வரையறை[தொகு]

இந்த உடன்படிக்கை தொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமையை பின்வருமாறு வரையறை செய்கிறது.

தொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமை என்பது வழமைகள்/நடைமுறைகள் (practices), உருபுகள் (representations), வெளிப்பாடுகள் (expressions), அறிவு (knowledge), செயற்திறன்கள் (skills) ஆகியனவும், கருவிகள் (instruments), பொருட்கள் (objects), கலைப்பொருட்கள் (artifacts), பண்பாட்டு வெளிகள் (cultural spaces) ஆகியனவும், குறிப்பாக ஒரு சமூகம், குழு அல்லது சில சமயங்களில் தனிநபர்கள் தமது பண்பாட்டு மரபுரிமையாக கருதுபவனவற்றைக் குறிக்கும். இந்த தொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமை தலைமுறை தலைமுறையாக பகிரப்பட்டு, தொடர்ச்சியாக சமூகங்களாலும் குழுக்களாலும் சூழலுக்கு ஏற்பவும், இயற்கை, வரலாற்றிற்றோடு ஊடாட்டம் ஊடாகவும் மீள் உருவாக்கம் செய்யப்படுவது. இது அடையாளத்தை, தொடர்ச்சியை அளிக்கிறது, ஆகையால் பண்பாட்டு பல்வகைத்தன்மையை, மனித படைப்பாக்கத்தை ஊக்குவிக்கின்றது. இந்த உடன்படிக்கையின் நோக்கங்களுக்கு, அனைத்துலக மனித உரிமைச் சட்டகங்களை மதிக்கும், சக மனிதர்களை, குழுக்களை, சமூகங்களை சமமாக மதிக்கும், பேண்தகு வளர்ச்சியை ஏதுவாக்கும் பண்பாட்டு மரபுரிமைகள் மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.[2]

மேற்சுட்டப்பட்ட தொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமை பின்வரும் களங்கள் ஊடாக வெளிப்படுத்தப்படுவதாக இந்த உடன்படிக்கை கூறுகிறது.

  • வாய்மொழி வரலாறுகளும் வெளிப்படுத்தல்களும், மொழி உட்பட்டதாக, மொழி தொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமையின் ஓர் ஊடாகமாகப் பார்க்கப்படுகின்றது
  • நிகழ்த்து கலைகள் - performing arts
  • சமூக வழக்கங்கள், சடங்குகள், கொண்டாட்ட நிகழ்வுகள்
  • இயற்கை மற்றும் அண்டம் தொடர்புடைய அறிவும் நடைமுறைகளும்
  • மரபுசார் அருங்கலைகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. States Parties to the Convention for the Safeguarding of the Intangible Cultural Heritage.
  2. "Text of the Convention for the Safeguarding of the Intangible Cultural Heritage". ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம். 2003. பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)