தொடக்கநிலை வணிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொடக்கநிலை வணிகம் அல்லது துளிர் நிறுவனம்[1] (startup company) என்பது ஒரு சிறிய கால வரலாறு உள்ள ஒரு வணிக நிறுவனம் ஆகும். பொதுவாக ஒரு புதிய கண்டுபிடிப்பு, பொருள், சேவை அல்லது உற்பத்தி முறையோடு சந்தைக்கு வரும் தொடக்கநிலை வணிகங்கள் சிறப்பாக இவ்வாறு குறிக்கப்படுகின்றன. ஏற்கனவே முதிர்ச்சி பெற்ற சந்தைகளில் வரும் புதிய வணிகங்களும் தொடக்கநிலை வணிகங்களே ஆகும். இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் ஒரு யோசனையோ அல்லது தனித்தன்மை மிக்க ஒரு சேவையையோ முதன்மையாக கொண்டு இயங்குபவை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "துளிர் நிறுவனம் (Startup Company) என்றால் என்ன? அறிவோம் புதிதாக". பொருள். 2021-05-05. 2021-10-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-10-23 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடக்கநிலை_வணிகம்&oldid=3559599" இருந்து மீள்விக்கப்பட்டது