தொகுப்புவழிப் பகுத்தறிதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொகுப்புவழிப் பகுத்தறிதல் அல்லது தொகுப்புவழித் தர்க்கம் என்பது குறிப்பிட்ட அவதானிப்புகளில் இருந்து பொதுவான முடிவுகளை அல்லது உண்மைகளை முன்வைத்தல் ஆகும். 'சில' ஆகையால் 'எல்லாம்' என்பதை அனுபவம் அல்லது சாட்சிகளின் ஊடாக பெற முற்படுகிறது. மேற்கோள்களுக்கும் முடிவுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை தொகுப்பு வழிச் சிக்கல் அல்லது தொகுப்புவழிப் பிரச்சினை என்பர். இந்த இடைவெளி புதிய சிந்தனைகள், எண்ணக்கருக்கள் பிறக்க வழிசெய்கிறது.

எடுத்துக்காட்டுக்கள்[தொகு]

  • மேற்கோள் 1: பொதுவாக மழை பெய்யும் போது மேகமூட்டமாக இருக்கும்.
  • மேற்கோள் 2: தற்போது மழை பெய்கிறது.
  • முடிவு: ஆகவே, தற்போது மேகமூட்டமாக இருக்கின்றது.