தைமோமா
தோற்றம்

தைமோமா (Thymoma) என்பது தைமசு சுரப்பியில் ஏற்படும் கட்டியாகும். தைமசு சுரப்பி நெஞ்சில் இதயத்திற்கு முன்பும் நெஞ்சுப் பட்டை எலும்பிற்கு பின்பும் அமைந்துள்ளது. சிலவகை வெள்ளை அணுக்கள் இங்கு தான் முழு வளர்ச்சி அடைகின்றன. இவை டி உயிரணுக்கள் (T- cell) எனப்படுகின்றன. தைமோமா புற்றுநோயல்ல. தைமசு கட்டி பிற இடங்களுக்கு பரவாது. உயிருக்கு ஊறுவிளைவிக்காது. ஆனால் தைமசு புற்று (Thymic carcinoma) உடலுக்கும் உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தும் பிற இடங்களுக்கு பரவும். ஆரம்ப நிலையில் கண்டு கொண்டு மருத்துவம் மேற்கொண்டால் குணப்படுத்த முடியும்.