தைமீயசு (உரையாடல்)
Appearance
தைமீயசு என்பது பிளேட்டோவால் எழுதப்பட்ட ஒரு உரையாடல் இலக்கியம். இது பெரும்பாலும், தலைப்புப் பாத்திரம் தானே பேசுவது போன்ற தன்னுரை வடிவத்தில் உள்ளது. கிமு 360 இல் எழுதப்பட்ட இது பௌதிக உலகினதும் மனிதர்களுடையதும் இயல்புகள் குறித்த ஊகங்களை முன்வைக்கிறது. சோக்கிரட்டீசு, லோக்ரியின் தைமீயசு, எர்மோக்கிரட்டீசு, கிரிட்டியாசு ஆகியோர் இதில் வரும் உரையாடல் பாத்திரங்கள்.[1][2][3]
அறிமுகம்
[தொகு]சோக்கிரட்டீசு தனது இலட்சிய அரசைப் பற்றி விளக்கிய அடுத்த நாள் உரையாடல் இடம்பெறுகிறது. பிளேட்டோவின் ஆக்கங்களில் இவ்வாறான ஒரு உரையாடல் அவரது குடியரசு (Republica) என்னும் நூலில் இடம்பெறுகிறது.