தேவேந்திர நாத் திவிவேதி
Appearance
தேவேந்திர நாத் திவிவேதி | |
---|---|
பிறப்பு | 30 மார்ச்சு 1935 |
இறப்பு | 1 ஆகத்து 2009 தில்லி, இந்தியா | (அகவை 74)
தேசியம் | இந்தியர் |
பணி | இந்திய அரசியல்வாதி, குசராத்தின் நியமன ஆளுநர், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பொதுச் செயலாளர், இந்தியாவின் கூடுதல் பொது சட்டமுகவர் & உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். 1974 முதல் 1980 வரை மாநிலங்களவை காங்கிரசு உறுப்பினர். |
பிள்ளைகள் | மனிசா திவிவேதி, சிவேந்திர திவிவேதி, ஆசிசு திவிவேதி |
தேவேந்திர நாத் திவிவேதி (Devendra Nath Dwivedi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1935 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 30 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். குசராத்து மாநிலத்தின் நியமிக்கப்பட்ட ஆளுநராக இருந்தார். 1974 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவையில் காங்கிரசு உறுப்பினராக இருந்தார். குசராத்து மாநிலத்தின் ஆளுநர் பதவியை முறையாக ஏற்கும் முன், 2009 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் தேதியன்று தன்னுடைய 74 ஆவது வயதில் காலமானார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ANI (1 August 2009). "Gujarat Governor designate D N Dwivedi passes away in New Delhi". Thaindian News இம் மூலத்தில் இருந்து 4 ஆகஸ்ட் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090804050505/http://www.thaindian.com/newsportal/india-news/gujarat-governor-designate-d-n-dwivedi-passes-away-in-new-delhi_100225993.html. பார்த்த நாள்: 30 April 2017.