தேவானந்த பரலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவானந்த பரலி (அசாமிய மொழி: দেৱানন্দ ভৰালি ,1883-1972) என்பவர் அசாமைச் சேர்ந்த ஒரு முன்னோடி மொழியியலாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர் ஆவார். [1] இவர் மிரி என்ற புனைபெயரைப் பயன்படுத்தி பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் 1883 சூனில் அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் இஷானந்த பரலிக்கு மகனாகப் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை[தொகு]

பரலியின் படைப்புகள் ஆங்கிலம் மற்றும் அசாமி ஆகிய இரண்டு மொழிகளிலும் உள்ளன. அவரது முக்கிய படைப்புகளில் சில:

  • ஆசாமிய பாஷர் மௌலிக் பிகார் அரு சாஹித்யோர் சினகி (অসমীয়া ভাষাৰ মৌলিক বিচাৰ আৰু সাহিত্যৰ চিনাকি), 1912 ல் வெளியிடப்பட்டது, [2]
  • Assamese Grammar in English (1902),
  • A Study of the Phonology and Vocabulary of Assamese Language (1960). [3]
  • சினா லூயிடேயா பாரே, பாரே (1972) [4]

இவர் "உஷா", "பன்ஹி" போன்ற அசாமிய இதழ்களில் தொடர்ந்து எழுதுபவர். சேக்ஸ்பியரின் "மக்பத்" நூலை முதன்முதலாக அசாமிய மொழியில் மொழிபெயர்த்தார்.

பரலியின் நாடகப் படைப்புகள் பின்வருமாறு:

  • பீமதர்பா (ভীমদৰ্প), மக்பத்தின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு 1910 இல் வெளியிடப்பட்டது. [5]
  • ஸ்ரீமான்டோ சங்கர் (শ্্ীমন্তশর) (1944)
  • பிஹு (বিহু)

குறிப்புகள்[தொகு]

  1. Kaliram Medhi (1978). Studies in the Vaiṣṇava Literature & Culture of Assam. Assam Sahitya Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 May 2013.
  2. "Asamiya Bhashara Maulika Bicara aru Sahityara Cinaki (8173310270) by Debananda Bharali @". Bookfinder.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-22.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Current Trends in Linguistics: V. 9: Linguistics in Western Europe Pts. 1 & 2, and Index to Names. Walter de Gruyter. பார்க்கப்பட்ட நாள் 22 May 2013.
  4. Cīnā Luitaea pāre, pāre. Dattabaruwā. பார்க்கப்பட்ட நாள் 22 May 2013.
  5. "Indian ReviewAssamese LiteratureShakespeare in Assamese : Navakanta Barua". Indianreview.in. Archived from the original on 2012-08-29. பார்க்கப்பட்ட நாள் 2013-05-22.

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவானந்த_பரலி&oldid=3667171" இலிருந்து மீள்விக்கப்பட்டது