தேப்ரா எல்மெகிரீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேப்ரா எல்மெகிரீன்
பிறப்புநவம்பர் 23, 1952 (1952-11-23) (அகவை 71)
சவுத் பெண்டு, இந்தியானா
குடியுரிமைஅமெரிக்கர்
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்கிட் பீக் வான்காணகம்
அரிசிபோ வான்காணகம்
மவுண்ட் வில்சன் வான்காணகம் அல்லது ஏல் வான்காணகம்
வாசர் கல்லூரி (1985 முதல் அண்மை வரை)
கல்விபிரின்சுடன் பல்கலைக்கழகம் (கலையிளவல்)
ஆர்வார்டு பல்கலைக்கழகம்]] (கலைமுதுவர், முனைவர்)
துணைவர்புரூசு எல்மெகிரீன்

தேப்ரா மெலாய் எல்மெகிரீன் (Debra Meloy Elmegreen) (பிறப்பு: நவம்பர் 23, 1952,[1] சவுத் பெண்டு, இந்தியானா) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். வானியற்பியலில் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவரே. மேலும். கார்னிகி வான்காணகங்களில் முதல் முதுமுனைவர் ஆராய்ச்சியாளராக விளங்கியவரும் இவரே ஆவார். இவர் புரூசு எல்மெகிரீன் எனும் வானியலாளரை மணந்தார். அதுமுதல் இவர்கள் இருவரும் ஒன்றாகவே இணைந்து வானியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதினர்.

இவர் 1985 இல் இருந்து வாசர் கல்லூரியில் வானியல் பேராசிரியராக உள்ளார். இவர் 1997 இல் ஒரு வானியல் நூலை எழுதிவனார். அதைப் பிரென்டிசு கால் குழுமம் 1997 இல் வெளியிட்டது. இவர் 2010 முதல் 2012 வரை அமெரிக்க வானியல் கழகத்தின் தலைவராக இருந்தார்2.

வாழ்க்கை[தொகு]

இவர் இந்தியானாவில் உள்ள சவுத் பெண்டில் 1952 இல் பிறந்தார்ரிவர் இளமையிலேயே வானியலில் ஆர்வும் பூண்டிருந்தார்.[2] இவர் 1975 இல் தன் வானியற்பியல் இளவல் பட்டத்தைப் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[3] இங்கு வானியற்பியலில் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவரே.[4] இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தின் வானியலில் முதுவர் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் ஏல் வான்காணகத்தில் (இப்போது மவுன்ட் வில்சன் வான்காணகம்)1979 இல் இருந்து முதுமுனைவர் ஆராய்ச்சியாளராக இருந்தார். இவர் கார்னிகி வான்காணகங்களிலேயே முதல் முதுமுனைவர் ஆராய்ச்சியாளராக விளங்கியவரும் இவரே.[4] இவர்1985 இல் இருந்து வாசர் கல்லூரியில் வானியலைப் பயிற்றுவிக்கலானர். இவர் 1990 இல் இணைப்பேராசிரியராகவும் 1993 இல் இருந்து துறைத்தலைவராகவும் ஆனார்.[2][5][6][7] இவர் விண்மீன் உருவாக்கம், பால்வெளி உருவாக்கம், பால்வெளிப் பகடிமலர்ச்சி ஆகிய புலங்களில் ஆர்வம் காட்டினார்.[8] இவர் 1997 இல் வானியலில் பட்டப்படிப்பு மாணவருக்கான பால்வெளிகளும் பால்வெளிக் கட்டமைப்பும் எனும் பாடநூலை பிரென்டிசு கால் குழுமம் வழியாக வெளியிட்டார். இவர் 200 அளவுக்கும் மேற்பட்ட கல்விசார் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவர் 2010 முதல் 2012 வரை அமெரிக்க வானியல் கழகத்தின் தலைவராகவும் இருந்தார்.[8][9] இவர் 2010 இல் வானியல், வானியற்பியல் பத்தாண்டு அளக்கையின் குழும உறுப்பினராகத் தேசிய அறிவியல், பொறியியல், மருத்துவக் கல்விக்கழகத்தால் அமர்த்தப்பட்டார்.[10]

இவர் 1976 இல் வானியலாலர் புரூசு எல்மெகிரீனை மணந்தார்.[2][7] இவர்கள் இருவரும் 2013 இல், "புடவியில் சுருள் கட்டமைப்பின் தோற்றம்" எனும் ஆய்வுக்கட்டுரையை வானியற்பியல் இதழில் வெளியிட்டனர்.[11]

பணிகள்[தொகு]

இவர் 200 அளவுக்கும் மேற்பட்ட கல்விசார் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் பின்வருவனவும் அடங்கும்.

  • Elmegreen, D. M., S4 G team, 2011, “Grand Design and Flocculent Spirals in the Spitzer Survey of Stellar Structure in Galaxies,” Astrophysical Journal, 737, 32
  • Elmegreen, D.M., et al. 2009, “Clumpy Galaxies in GEMS and GOODS: Massive Analogs of Local Dwarf Irregulars,” Astrophysical Journal, 701, 306
  • Elmegreen, D., et al. 2007, “Resolved Galaxies in the Hubble Ultra Deep Field: Star Formation in Disks at High Redshift,” Astrophysical Journal, 658, 763

மேற்கோள்கள்[தொகு]

  1. https://lccn.loc.gov/n97106480
  2. 2.0 2.1 2.2 2.3 "Debra Meloy Elmegreen". Hubble Heritage Project. பார்க்கப்பட்ட நாள் November 10, 2015.
  3. Deivasigamani, Shruthi (May 29, 2015). "The American siege on science". The Daily Princetonian. Archived from the original on செப்டம்பர் 5, 2015. பார்க்கப்பட்ட நாள் November 10, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 Maran, Stephen P. (May 19, 2011). "Portman's Role In 'Thor' Highlights Rise Of Women In Astronomy". LiveScience. பார்க்கப்பட்ட நாள் November 10, 2015.
  5. Bailey, Martha (1998). American Women in Science 1950 to Present A Biographical Dictionary. Santa Barbara, California: ABC-CLIO. பக். 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87436-921-5. https://archive.org/details/americanwomenins0000bail. 
  6. 7.0 7.1 O'Neill, Ian (December 30, 2013). "When Did Galaxies Get Their Spirals?". Discover News. Archived from the original on டிசம்பர் 31, 2013. பார்க்கப்பட்ட நாள் November 10, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. 8.0 8.1 "Debra Meloy Elmegreen". Vassar College. Archived from the original on நவம்பர் 10, 2017. பார்க்கப்பட்ட நாள் November 10, 2015.
  8. "Past Officers and Councilors". American Astronomical Society. Archived from the original on ஆகஸ்ட் 10, 2018. பார்க்கப்பட்ட நாள் November 10, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Astro2010: The Astronomy and Astrophysics Decadal Survey". National Academies of Sciences, Engineering, and Medicine. Archived from the original on அக்டோபர் 25, 2019. பார்க்கப்பட்ட நாள் November 10, 2015.
  10. Elmegreen, Debra Meloy; Elmegreen, Bruce G. (January 20, 2014) (PDF). The Onset of Spiral Structure in the Universe. 781. The Astrophysical Journal. doi:10.1088/0004-637X/781/1/11. Bibcode: 2014ApJ...781...11E. http://iopscience.iop.org/article/10.1088/0004-637X/781/1/11/pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேப்ரா_எல்மெகிரீன்&oldid=3581980" இலிருந்து மீள்விக்கப்பட்டது