தேனீர் சடங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜப்பான், கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளில் மிகவும் பண்புபடுத்தப்பட்ட ஒரு மரபு சடங்காகவும் கலையாகவும் தேனீர் சடங்கு (Tea Ceremony) வழங்குகின்றது. தேனீர் சடங்கு நடத்துனர் மரபுகளுக்கமைய தேனீரை தயாரித்து விருந்துனருடன் பகிர்வதே இச்சடங்கின் சாரம்சம்.

தேனீர் சடங்கு நடத்துனர் தேனீர் வகைகள், தயாரித்தல், பரிமாறல் போன்ற கலைகளில் மட்டுமல்லாமல், இது போன்ற பல கலைகளை அறிந்து அவற்றின் சடங்கின் பங்கினையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். இக்கலையை முழுமையாக கற்க பல ஆண்டுகள் தேவையாகும்.

தேனீர் சடங்கை வெறும் தேனீர் அருந்தும் ஒரு நிகழ்ச்சியாக பார்க்க முடியாது. ஆத்மீக, உளவியல், சமூக நிலையில் தேனீர் சடங்கை அணுகினாலே அது வழங்கும் பண்பாடுகளில் அதற்கு இருக்கும் முக்கியதுவத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனீர்_சடங்கு&oldid=3397918" இருந்து மீள்விக்கப்பட்டது