உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம்

ஆள்கூறுகள்: 13°01′11″N 77°33′58″E / 13.01978°N 77.56605°E / 13.01978; 77.56605
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம்
National Institute of Advanced Studies
வகை
  • தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனம்
உருவாக்கம்20 சூன் 1988 (20 சூன் 1988)
நிறுவுனர்
பணிப்பாளர்சாய்லேசு நாயக்கு
அமைவிடம், ,
இந்தியா

இணையதளம்www.nias.res.in

தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம் (National Institute of Advanced Studies) என்பது இயற்கை அறிவியல், சமூக அறிவியல், கலை மற்றும் மனிதநேயம் ஆகிய பல்வேறு துறைகள் மற்றும் பல்துறை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் முதன்மையான ஒரு நிறுவனமாகும்.[1] விஞ்ஞானம், கலை மற்றும் மனிதநேயம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க கல்வியாளர்களுடன் தொடர்புகொள்வதற்கும் தகவல் பரிமாற்றம் செய்வதற்கும் நிர்வாகிகள், மேலாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுக்கு ஒரு வழியை வழங்குவதற்காகவும் இந்நிறுவனம் ஜே.ஆர்.டி.டாடாவால் நிறுவப்பட்டது. இந்த நோக்கங்களுடன், தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம் பல நிலை ஆராய்ச்சி திட்டங்களை நடத்துகிறது மற்றும் திறமையான முனைவர் பட்ட மாணவர்களுக்கும் வழிகாட்டுகிறது. தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூருவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், [2] 1988 ஆம் ஆண்டு சூன் மாதம் 20 ஆம் தேதியன்று டாக்டர் இராசா ராமண்ணாவை அதன் நிறுவனர் இயக்குனராகக் கொண்டு செயல்படத் தொடங்கியது.[1][3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Dorabji Trust profile". Dorabji Trust. 2015. பார்க்கப்பட்ட நாள் 10 July 2015.
  2. "ResearchGate profile". 2015. பார்க்கப்பட்ட நாள் 11 July 2015.
  3. "Raja Ramanna Biography". iLove India. 2015. பார்க்கப்பட்ட நாள் 10 July 2015.