தேசிய மறைகுறியீட்டுத் தகவலியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மறைகுறியீட்டுத் தகவலியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தேசிய நிறுவனம்
National Institute of Cryptology Research and Development
துறை மேலோட்டம்
அமைப்பு2007
தலைமையகம்ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா
மூல நிறுவனம்தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்

தேசிய மறைகுறியீட்டுத் தகவலியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (National Institute of Cryptology Research and Development) என்பது மறைகுறியீட்டுத் தகவலியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக நிறுவப்பட்ட தேசிய அளவிலான ஓர் ஆராய்ச்சி மையமாகும். இந்தியாவின் தெலங்காணா மாநிலத்திலுள்ள ஐதராபாத்து நகரத்தில் இந்நிறுவனம் அமைந்துள்ளது.[1]

வரலாறு[தொகு]

இந்த நிறுவனம் ஐதராபாத்து நகரத்தில் 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.[2] தேசிய முக்கிய தகவல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மையமும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் கீழ் செயல்படுகிறது.

நிதிப் பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பிற்கான ஒப்புருவாக்க ஆய்வகங்கள், எண்ணிலக்க படையரண் ஆய்வகங்கள் ஆகியவற்றை அமைக்க இந்நிறுவனம் திட்டமிடப்பட்டது. மேலும், தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான பயன்பாடுகளுக்கான குறியாக்க தயாரிப்புகளையும் உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Key security outfit now near Hyderabad". Hindustan Times (in ஆங்கிலம்). 2007-05-05. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
  2. Khan, Mr Hamid; Hooda, Ms Yogita (2017-06-15). INTERNAL SECURITY (in ஆங்கிலம்). McGraw-Hill Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5260-675-7.