தேசிய ஊக்க விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேந்திரிய வித்தியாலய தேசிய அளவிலான ஊக்குவிப்பு விருதுகள் பெற்றவர்களுடன் கல்வி அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

தேசிய ஊக்க விருது (கேந்திரிய வித்யாலயா) என்பது தேசிய அளவில் கேந்திரிய வித்யாலயா சங்கதன் தன் ஊழியர்கள் 30 பெருக்கு (25 ஆசிரியர் மற்றும் 5 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள்) ஒவ்வொரு ஆண்டும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிறுவன நாளினை முன்னிட்டு தேசிய அளவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ஆகும். இந்த விருதினை கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஆணையர் வழங்குவார்.[1][2][3]

செயல்முறை[தொகு]

விருதிற்கு விண்ணப்பத்தினை ஊழியர்களிடமிருந்து வழங்க இந்நிறுவனம் கோரும் போது, ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விருதிற்கு விண்ணப்பித்த அனைத்து போட்டியாளர்களும் 7 முதல் 10 நிமிடங்கள் கால அளவில், மாணவர்கள், அமைப்பு மற்றும் தேசத்திற்கான தாங்களின்சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் பற்றி பிராந்திய அளவிலான சுயாதீன நடுவர் மன்றத்தின் முன் விளக்கி எடுத்துரைக்க வேண்டும்.[4] [5] இந்த விருதிற்குப் பெறப்படும் 99[6] விண்ணப்பதாரர்களிடமிருந்து (72 ஆசிரியர் மற்றும் 27 கற்பித்தல் அல்லாத பணியில் உள்ளவர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த சுற்றுத் தேர்விற்கு அனுப்பப்படுவர். இவர்களைத் தேசிய அளவில் நியமிக்கப்படும் நடுவர்கள் தேர்ந்தெடுப்பர்.[1][7][8][9]

விருது[தொகு]

கேந்திரிய வித்யாலயா நிறுவன தினத்தன்று (திசம்பர் 15) வழங்கப்படும் இந்த விருதுக்கு மொத்தம் 30 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த விருது ரூ. 20,000/-, பொன்னாடை, நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழைக் கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Incentive Award of Kendriya Vidyalaya" (PDF). Kendriya Vidyalaya. 20 Oct 2020. பார்க்கப்பட்ட நாள் 19 Aug 2021.
  2. EB Bureau (15 Dec 2019). "KVS Foundation Day: 30 Teachers Receive 'National Incentive Award'". Education Bytes. பார்க்கப்பட்ட நாள் 19 Aug 2021.
  3. "Kendriya Vidyalaya Sangathan Foundation Day". Indian Bureaucracy. 15 Dec 2016. பார்க்கப்பட்ட நாள் 19 Aug 2021.
  4. "KVS regional incentive award ceremony held in Dimapur". 29 Jan 2020 இம் மூலத்தில் இருந்து 19 ஆகஸ்ட் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210819103019/https://www.nagalandpost.com/kvs-regional-incentive-award-ceremony-held-in-dimapur/210472.html. 
  5. "KVS awards presented to teaching faculty". 15 Dec 2014. https://www.tribuneindia.com/news/archive/features/pm-modi-arrives-in-portugal-on-first-leg-of-3-nation-tour-18481. 
  6. "KVS Foundation Day: 95 teachers awarded for outstanding, meritorious services". 15 Dec 2017. http://www.uniindia.com/kvs-foundation-day-95-teachers-awarded-for-outstanding-meritorious-services/india/news/1078042.html. 
  7. "A moment of pride". The Hans India. 18 Dec 2017. https://www.thehansindia.com/posts/index/Hyderabad-Tab/2017-12-17/A-moment-of-pride/346099. 
  8. "केंद्रीय विद्यालय संगठन लखनऊ संभाग द्वारा आयोजित किया गया प्रोत्साहन पुरस्कार समारोह". Amar Ujala. 17 Feb 2020. https://www.amarujala.com/lucknow/incentive-award-ceremony-organized-by-kendriya-vidyalaya-sangathan-lucknow-division. 
  9. "KVS holds Incentive Award ceremony". The Pioneer (India). 21 Dec 2017. https://www.dailypioneer.com/2017/state-editions/kvs-holds-incentive-award-ceremony.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_ஊக்க_விருது&oldid=3677297" இலிருந்து மீள்விக்கப்பட்டது