தேசிய இளைஞர் நிர்வாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய இளைஞர் நிர்வாகம் (தே.இ.நி) என்பது அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் என்பவரால் துவக்கப்பட்ட ஒரு புதிய ஒப்பந்த நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 16 வயது முதல் 25 வயதிற்கு இடைப்பட்டு இருந்த அமெரிக்கர்களுக்கு வேலை மற்றும் கல்வி அளிப்பதில் கவனம் செலுத்தியது.[1] இது ஜூன் 26, 1935 முதல் 1939 வரை, வேலைகள் முன்னேற்ற நிர்வாகத்தின் (வே.மு.நி) ஒரு பகுதியாக செயல்பட்டது[2].1939, மறுசீரமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியபின், தே.இ.நி., வே.மு.நி இலிருந்து மத்திய பாதுகாப்பு முகமைக்கு மாற்றப்பட்டது[3]. 1942 ஆம் ஆண்டில், தே.இ.நி., போர் மனித ஆற்றல் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது.[4]

1938 வாக்கில், கல்லூரி இளைஞர்கள் தங்கள் பள்ளிகளில் "வேலை ஆய்வு" திட்டங்களுக்காக மாதத்திற்கு $6 முதல் $40 வரை ஊதியம் பெற்றனர். நிவாரணக் குடும்பங்களில் இருந்து 155,000 சிறுவர்களும், பெண்களும் ஒரு மாதத்திற்கு 10 முதல் 25 டாலர்கள் வரை ஊதியம் பெற்றனர். பொதுமக்கள் பாதுகாப்புக் கழகங்களைப் போலன்றி, இளம் பெண்களும் இதில் அடங்குவர். இளைஞர்கள் பொதுவாக வீட்டில் வாழ்ந்து, கட்டுமான அல்லது பழுதுத்திட்டங்களில் வேலை செய்தனர். அதன் வருடாந்திர வருடாந்திர வரவுசெலவுத் திட்டப்பட்டியல் சுமார் $58,000,000 ஆகும்.

மேற்கோள்[தொகு]

  1. http://digital.library.okstate.edu/encyclopedia/entries/N/NA014.html
  2. https://en.wikipedia.org/wiki/National_Youth_Administration#cite_ref-opzla_2-2
  3. https://en.wikipedia.org/wiki/National_Youth_Administration#cite_ref-opzla_2-2
  4. https://en.wikipedia.org/wiki/National_Youth_Administration#cite_ref-opzla_2-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_இளைஞர்_நிர்வாகம்&oldid=2941061" இலிருந்து மீள்விக்கப்பட்டது