தெற்கு மரீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெற்கு மரீனா (Marina South) என்பது சிங்கப்பூர் மத்திய மண்டலத்தின் மத்திய பகுதிக்குள் அமைந்துள்ள ஒரு திட்ட விரிவாக்கப் பகுதியாகும். மரீனா சௌத் என்ற பெயரால் இப்பகுதி அழைக்கப்படுகிறது. வளைகுடா தோட்டம் எனப்படும் இயற்கைப்பூங்கா 250 ஏக்கர் பரப்பளவில் இப்பகுதியில் அமைந்துள்ளது. ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ள சிங்கப்பூர் அணையும் இப்பகுதியில்தான் அமைந்துள்ளது. சிங்கப்பூர் திட்ட விரிவாக்கப் பகுதி இடம்பெற்றுள்ள பெரிய தீபகற்பத்தைக் குறிக்கவும் தெற்கு மரீனா என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரின் மத்தியப் பகுதியிலுள்ள சிட்ரெய்ட்சு வியூ எனப்படும் நீரிணை காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க டவுன்டவுன் கோர் என்ற சிங்கப்பூர் திட்ட விரிவாக்கப் பகுதிகளும் தெற்கு மரீனாவில் உள்ளடங்கியுள்ளன.

வடக்கு மற்றும் வடகிழக்கில் மரீனா கிழக்கும், தென்மேற்கில் நீரிணைக் காட்சிப் பகுதியும், வடக்கு மற்றும் மேற்கில் டவுன்டவுன் கோரும், தெற்கு மற்றும் கிழக்கில் சிங்கப்பூர் சிட்ரெயிட்சு எனப்படும் சிங்கப்பூர் நீரிணையும் தெற்கு மரீனாவுக்கு எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு[தொகு]

மரீனா மையத்தின் நிலப்பகுதியும் தெற்கு மரீனா நிலப்பகுதியும் கடலில் இருந்து மீட்கப்பட்டு புதியதாக உருவாக்கப்பட்ட நிலப்பகுதியே மரீனா விரிகுடா என்று அழைக்கப்படுகிறது. புதியதாக உருவாக்கப்பட்ட அந்நிலப்பகுதி மக்கள் குடியேற அனுமதிக்கப்பட்டப் பின்னர் வேகமாக வளர்ச்சியடைந்தது. இடைக்கால நடவடிக்கையாக முதலில் இப்பகுதியில் பட்டம் பறக்கவிடவும் கால்பந்து விளையாடுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. வெளிப்புற உணவு விடுதிகள், பௌளிங் எனப்படும் பந்துருட்டும் குறும்பாதைகள் பொழுதுபோக்கு விளையாட்டு வளைவுகள் முதலியவற்றை அனுமதிக்க வர்த்தக மாவட்டங்கள் கட்டப்பட்டன. வெளிப்புற உணவு விடுதிகள், பௌளிங் எனப்படும் பந்துருட்டும் குறும்பாதைகள் பொழுதுபோக்கு விளையாட்டு வளைவுகள் முதலியவற்றை அனுமதிக்க வர்த்தக மாவட்டங்கள் கட்டப்பட்டன. 1990 ஆம் ஆண்டுகளின் மறுமலர்ச்சி கால முற்பகுதியில் இங்கிருந்த சிங்கப்பூரின் கான்டோ எனப்படும் சீனநாட்டு நடனவிடுதியை நோக்கி இளைஞர் கூட்டம் திரண்டு வந்தனர். ஆனால் இந்த வாணிகம் குறைந்து விட்டதால் தற்போது இவ்வகை விடுதிகள் மூடப்பட்டன.

வளர்ச்சிகள்[தொகு]

1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தெற்கு மரீனா கடலில் இருந்து மீட்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், சிங்கப்பூரின் மத்திய வர்த்தக மையத்திற்கு அருகில் கூடுதல் நிலப்பகுதியை உருவாக்குவதாகும். மரீனா நகரப் பூங்கா 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்பட்டது.[1] இப்பூங்காவை 21 ஆம் நூற்றாண்டில் சிங்கப்பூரின் முதன்மையான பூங்காவாக அமைக்கத் திட்டமிட்டார்கள். கொலியர் குவேயில் அமைக்கப்பட்டிருந்த பழைய கிளிஃபோர்டு படகுத்துறைக்குப் பதிலாக புதிய கப்பல் முனையம் தெற்கு மரீனா கப்பல் நிறுத்துமிடம் என்ற பெயரில் அமைக்கப்பட்டது. இது 2006 ஆம் ஆண்டில் ஏப்ரல் 1 ஆம் தேதி திறக்கப்பட்டது. வளைகுடா தோட்ட விரிவாக்கப் பணிகளுக்காக மரீனா நகரப் பூங்கா 2007 ஆம் ஆண்டு சூன் மாதம் 1 ஆம் தேதி முதல் மூடப்பட்டது. தெற்கு மரினாவின் வடக்கு கரையில் மரீனா பே சேண்ட்சு என்ற ஒருங்கிணைந்த கேளிக்கை மையம் கட்டப்பட்டு 2010 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. இக்கேளிக்கை மையம் வளைகுடா தோட்டத்திற்கும் மரீனா விரிகுடா நிதி மையத்திற்கும் அடுத்ததாக அமைந்துள்ளது. மரீனா விரிகுடா நிதி மையமும் 2013 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

மரீனா விரிகுடா கப்பல் மையம் புதியதாக சிங்கப்பூரில் கட்டப்பட்டு 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது.[2] இது தற்போதைய தெற்கு மரீனா கப்பல் நிறுத்துமிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த மையம் உலகின் மிகப்பெரிய கப்பல்கள் சிலவற்றிற்கு இடமளிக்கும் வகையிலான வசதிகளைக் கொண்டுள்ளது.[3]. சிங்கப்பூர் கப்பல் மையத்தை தவிர்த்து புதியதாகக் கட்டப்பட்ட இக்கப்பல் மையம், சிங்கப்பூரின் ஓய்வு பயணக் கப்பல் பிரிவின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.[4].

போக்குவரத்து[தொகு]

மரீனா பே இரயில் நிலையம், பேஃபிரண்ட் இரயில் நிலையம் என்ற இரண்டு இரயில் நிலையங்கள் தெற்கு மரீனா பகுதியில் இயங்குகின்றன. இவை வட்டப்பாதை வழித்தடத்தின் ஓர் அங்கமாகும்.

மரீனா வளைகுடா, சிங்கப்பூர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Official Opening of the Marina City Park and Unveiling …". www.nas.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2018-10-26.
  2. "Marina Bay Cruise Centre opens officially".
  3. "Design Features". Archived from the original on 2012-06-10.
  4. "Marina Bay Cruise Centre Singapore to create some 3,000 jobs". May 22, 2012 இம் மூலத்தில் இருந்து ஜூன் 25, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120625065621/http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/1202876/1/.html. பார்த்த நாள்: December 31, 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_மரீனா&oldid=3284587" இலிருந்து மீள்விக்கப்பட்டது