தெற்கு ஒண்டாரியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெற்கு ஒண்டாரியோ என்பது கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் ஒரு பகுதி. இது கனடாவின் தெற்குப் பகுதியில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட பகுதி. ஒண்டாரியோ மாகாணத்தின் 15 சதவீதம் பகுதியைக் கொண்டிருக்கிறது. இதை மத்திய ஒண்டாரியோ, தென்மேற்கு ஒண்டாரியோ, கோல்டன் ஹார்ஷூ என்றும் பிரித்துள்ளனர்.

சுற்றுலா[தொகு]

சியென் டவர், நயகரா நீர்வீழ்ச்சி கனடாவின் தேசிய காட்சியகம், கனடா வொண்டர்லேண்ட், டொரன்டோ விலங்குகாட்சிச் சாலை, ராயல் ஒன்டாரியோ அருங்காட்சியகம் ஆகியன இங்குள்ளன. நயகரா நீர்வீழ்ச்சி, உலகளவில் அதிகம் சுற்றிப்பார்க்கப்படும் இடங்களில் ஆறாவது இடத்தில் உள்ளது. அதிக மக்கள் பயணச் சுற்றுலா செல்லும் இடங்களில் டொரன்டோ நகரமும் உள்ளது. டொரன்டோ மேப்பிள்லீவ்ஸ், ஒட்டாவா செனட்டர்ஸ், டொரன்டோ புளூ ஜெய்ஸ் உள்ளிட்ட விளையாட்டுக் குழுக்களும் இப்பகுதியைச் சேர்ந்தவை.

டொரன்டோ சர்வதேச திரைப்பட விழா, பிரைட் வீக், கனடா டே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இந்த பகுதியிலேயே நடத்தப்படுகின்றன. இந்தப் பகுதி அழகிய கடற்கரைகளையும் கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_ஒண்டாரியோ&oldid=3607319" இருந்து மீள்விக்கப்பட்டது