தெறாடி
ஒரு தெறாடி(musket) என்பது 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு சீர்குழல் ஆயுதமாகத் தோன்றிய ஒரு முகவாய் தாணிக்கப்பட்ட நீண்ட சுடுகலனாகும், முதலில் கொக்கிக்குழலின் கனமான விருத்தாக வந்த இது, கனமான கவசத்தை ஊடுருவக்கூடிய இயல்பைக் கொண்டது ஆகும். 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், கனமான கவசம் குறைந்துவிட்டதால் இந்த வகை தெறாடி பயன்பாட்டில் இல்லை, ஆனால் திரியள் செந்தரமாக மாறியதால், தெறாடி என்ற சொல்லானது ஒரு நீண்ட அனற்கலள் கொண்ட சுடுகலனிற்கான பெயராக 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அதன் வழித்தோன்றல்கள் மூலம் தொடர்ந்தது.
1835 ஆம் ஆண்டில் காசிமிர் இலெஃவசெக்சுஅறிமுகப்படுத்திய வெடிப்பொதியிட்ட வெந்-தாணித்தல் சுடுகலன்கள், 1849 ஆம் ஆண்டில் கிளாட்-எட்டியென் மினியால் புதுப்புனையப்பட்ட மினியே குண்டு மற்றும்1854 ஆம் ஆண்டில் வோல்கானிக் ரிப்பீட்டிங் ஆர்ம்சு என்ற நிறுவனத்தால் விளைவிக்கப்பட்ட முதல் நம்பகமான மீளடி சுடுகலன்கள் ஆகியவற்றின் விளைவாக மரையிடப்பட்ட தெறாடிகள் (புத்தியல் சொற்களில் துமுக்கிகள் என்று அழைக்கப்படுபவை) பொதுவானதாக மாறியபோது, 19 ஆம் நூற்றாண்டில் இந்த பாணி தெறாடி ஓய்வு பெற்றது. மீளடி சுடுகலன்கள் பொதுவானதாகிவிட்டதால், அவை வெறுமனே "துமுக்கிகள்" என்று அழைக்கப்பட்டன, இது தெறாடியின் ஊழியை முடிவுக்குக் கொண்டுவந்தது.
சொற்பிறப்பியல்
[தொகு]ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகராதியின் கூற்றுப்படி, வேட்டெஃகங்கள் பெரும்பாலும் விலங்குகளின் பெய்ராஅல் பெயரிடப்பட்டன, மேலும் Musket என்ற சொல் பிரஞ்சு வார்த்தையான mousquetteலிருந்து பெறப்பட்டது, இது ஒரு ஆண் சிட்டுப்பருந்துக்கான பெயர். ஒரு மாற்றுக் கோட்பாடு என்னவென்றால், 16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு mousquet, -ette, இத்தாலிய moschetto, -ettaவிலிருந்து பெறப்பட்டது, அதாவது ஒரு எந்திரவில் இன் அம்பு. இத்தாலிய moschetto என்பது mosca, ஒரு இலையான் ஆகும்.
தமிழ்ச்சொல்லான தெறாடியின் சொற்பிறப்பு மூன்று சொற்களின் - தெறு + ஆடு + இ - கூட்டுச் சொல்லாகும். தெறு - சுடு; ஆடு- கொல் (இச்சொல்லுக்கு மட்டும் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட பொருள் இருக்கிறது); இ - விகுதி. இதன் பொருள் சுட்டுக் கொல்லப் பயன்படும் ஓர் கருவி என்பதாகும்.
குறிப்புகள்
[தொகு]