தெம்பி தொடருந்து விபத்து

ஆள்கூறுகள்: 39°50′54″N 22°31′00″E / 39.84833°N 22.51667°E / 39.84833; 22.51667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெம்பி தொடருந்து விபதது
தெம்பி தொடருந்து விபத்து is located in கிரேக்கம்
தெம்பி தொடருந்து விபத்து
விவரங்கள்
நாள்பெப்ரவரி 28, 2023 (2023-02-28)[1]
23:21 கிழக்கு ஐரோப்பிய நேரம் (21:21 ஒசநே)[1]
இடம்எவாஞ்சிலிஸ்மோஸ் அருகில், தெம்பி நகரம், லாரிஸ்சா மண்டலம், தெசலி மாகாணம், கிரீஸ்
ஆளுகூறுகள்39°50′54″N 22°31′00″E / 39.84833°N 22.51667°E / 39.84833; 22.51667
நாடுகிரீஸ்
தடம்ஏதன்ஸ்-தெசலி இருப்புப் பாதை
Operatorஎலனிய தொடருந்து
Incident typeஒரே தண்டவாளத்தில் எதிர்-எதிரே வந்த இரு தொடருந்துகள் மோதல்
காரணம்விசாரணையில்
தரவுகள்
இறப்புகள்38
காயம்>85
காணாமல் போனோர்50-60
விபத்தில் சிக்கிய சிமோன்ஸ் ஹெல்லாஸ்ஸ்பிரிண்டர் இரயில் எஞ்சின்
விபத்தில் சிக்கிய சிமோன்ஸ்/பாம்பார்டியர் இரயில் பெட்டிகள்

தெம்பி தொடருந்து விபத்து (Tempi train collision) கிரேக்கத்தில் தெசலி மாகாணத்தில் 2023 பிப்ரவரி 28 அன்று தெம்பி சமவெளிக்கு தெற்கே, இவாஞ்சிலிஸ்மோஸ் கிராமத்திற்கு அருகில், ஏதன்ஸ் நகரத்திலிருந்து, திஸ்லனொய்கி நகரத்திற்கு 380 பயணியர்களுடன் சென்று கொண்டிருந்த பயணியர் தொடருந்து வண்டியும், அதே இருப்புப் பாதையில் எதிர் திசையிலிருந்து வந்த கொண்டிருந்த சரக்குத் தொடருந்து வண்டியும் மோதிய வேகத்தில் இரு வண்டிகளும் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 48 பயணியர் இறந்ததாகவும், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாகவும் அரசு நிர்வாகம் அறிவித்தது.[2][3][4] கிரேக்கத்தின் வரலாற்றில் இதுவே மோசமான தொடருந்து விபத்து எனக் கூறப்படுகின்றது. இந்த விபத்திற்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு அந்நாட்டின் உட்கட்டமைப்பு, போக்குவரத்து அமைச்சர் கோஸ்டாஸ் காரமன்லிஸ் பதவி விலகினார்.[5] இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடந்தது.

மேற்கோள்கள்[தொகு]