தெணியான்
Appearance
தெணியான் | |
---|---|
பிறப்பு | கந்தையா நடேசு 6 சனவரி 1942 பொலிகண்டி, வல்வெட்டித்துறை, இலங்கை |
இறப்பு | மே 22, 2022 கரணவாய், கரவெட்டி, இலங்கை | (அகவை 80)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரி |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | கந்தையா, சின்னம்மா |
வாழ்க்கைத் துணை | மரகதம் |
பிள்ளைகள் | 4 |
தெணியான் என்ற புனைபெயரால் அறியப்படும் கந்தையா நடேசு (6 சனவரி 1942 – 22 மே 2022) ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் பொலிகண்டி என்ற ஊரைச் சேர்ந்தவர்.
எழுத்துப்பணி
[தொகு]ஆசிரியராகப் பணியாற்றிய தெணியான் விவேகியில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மேலும் புதினம், குறும் புதினம், கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். தினக்குரலில் நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி என்ற 19 அத்தியாயங்கள் கொண்ட தொடரையும் எழுதியுள்ளார்.
இவரது நூல்கள்
[தொகு]சிறுகதைத் தொகுதிகள்
[தொகு]- சொத்து (1984)
- மாத்து வேட்டி (1990)
- இன்னொரு புதிய கோணம்
- ஒடுக்கப்பட்டவர்கள்
- தெணியானின் ஜீவநதிச் சிறுகதைகள் (2013)
புதினங்கள்
[தொகு]- விடிவை நோக்கி (வீரகேசரிப் பிரசுரம், 1973)
- கழுகுகள் (1981)
- பொற்சிறையில் வாடும் புனிதர்கள் (1989)
- மரக்கொக்கு (வெளியீடு: நான்காவது பரிமாணம், கனடா, (1994)
- காத்திருப்பு (1999)
- கானலில் மான் (2002)
- தவறிப்போனவன் கதை
குறும் புதினங்கள்
[தொகு]- சிதைவுகள் (2003) வெளியீடு: மீரா பதிப்பகம் கொழும்பு)
- பனையின் நிழல்
கட்டுரைத் தொகுதிகள்
[தொகு]- இன்னும் சொல்லாதவை
- நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி
விருதுகள்
[தொகு]- கலாபூஷணம் விருது
- இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு
- கு. சின்னப்ப பாரதி அறக்கொடை விருது
- கொடகே விருது
- ஆளுநர் விருது