தூரமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தூர மானி[தொகு]

      தூரமானி என்பது, மிதிவண்டி மற்றும் தானியகங்கி வாகனங்களில் பயன்படும்

கருவியாகும். இது வாகனம் கடந்த தொலைவு அல்லது தூரத்தை காட்டுகிறது. தூரமானியை ஆங்கிலத்தில் ஒடோமீட்டர் (odometer) என அழைக்கப்படுகிறது. இக்கருவியானது எந்திரவியல் மூலமாகவோ, மின்னணுவியல் மூலமாகவோ, அல்லது இரண்டும் பயன்படுத்தப்பட்டோ தாயாரிக்கப்படுகிறது.

பெயர் வரலாறு[தொகு]

      ஒடோமீட்டர் என்னும் பெயர்ச்சொல் ஹோடோ (பாதை அல்லது நுழைவாயில்) மற்றும் மீட்டிரான் (அளத்தல்) ஆகிய கிரேக்க மொழி வார்த்தைகளிலிருந்து உண்டானது.

செயல்படும் விதம்[தொகு]

      ஓர் தூரமானியானது, வாகனம் கடந்துள்ள தூரத்தை, அவ்வாகனச் சக்கரத்தின் சுழற்சியின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு காட்டுகிறது. எந்திரவியல் தூரமானியானது பல்சக்கர அமைப்பையும்[1](gear), பல வளையங்களையும் கொண்டு இயங்குகிறது. 

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூரமானி&oldid=2722849" இருந்து மீள்விக்கப்பட்டது