தூய்மை பெறும் நிலை
தூய்மை பெறும் நிலை அல்லது உத்தரிப்புநிலை அல்லது உத்தரிக்கிற ஸ்தலம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கையின்படி சாகும் வேளையில் நம்பிக்கையுடன் கடவுளோடு நட்புறவில் இறந்தும் விண்ணகம் செல்ல முழு தகுதியற்றவர்களாக இருப்பவர்கள், சிறிது காத்திருந்து தூய்மைபெற்று முதிர்ச்சியடைய கடவுளால் அளிக்கப்படும் வாய்ப்பு ஆகும்.[1] இவர்கள் இந்த நிலையில் தங்கள் பாவங்களுக்கு உரிய வேதனைப்பட்டு, தூய்மை அடைவார்கள் எனவும் முற்றிலும் தூய்மை அடைந்த பிறகு, விண்ணகம் செல்வார்கள் எனவும் கத்தோலிக்கர் நம்புகின்றனர்.[2] இத்தகையோருக்கு கத்தோலிக்க திருச்சபையினர் இவ்வுலகில் இருந்து தங்களின் மன்றாட்டினால் உதவிட முடியும் என நம்புகின்றனர். நவம்பர் மாதம் முழுதும் இந்த நிலையில் இருப்போருக்காக கத்தோலிக்கர்கள் சிறப்பாக மன்றாடுகின்றனர். குறிப்பாக இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாளன்று அவர்களின் கல்லரைகளுக்குச்சென்று மன்றாடுவது வழக்கமாய் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி சுருக்கம் பக்கம் 127
- ↑ புதிய திருமறைச் சுவடி:(9) - மனிதரின் நிறைவு நிலை: 124