துல்லுசு ஓசுதிலியசு

துல்லுசு ஓசுதிலியசு (ஆட்சி கி. மு. 672 – 640) என்பவர் தொன்மவியலின் படி உரோமின் மூன்றாவது மன்னன் ஆவார். இவர் நுமா பாம்பிலியசுவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார். இவருக்கு முன்னிருந்த மன்னரைப் போல் இல்லாமல், துல்லுசு ஒரு போர்க் குணம் கொண்ட மன்னனாக அறியப்பட்டார். உரோமானிய வரலாற்றாளர் லிவியின் கூற்றுப் படி தனக்கு முன்னிருந்த மன்னரின் மிகுந்த அமைதியான இயல்பானது உரோமை பலவீனப்படுத்தி விட்டதாக இவர் நம்பினார். இவர் போரை விரும்பினர் என்று குறிப்பிடப்படுகிறது. உரோமின் முதல் மன்னனான உரோமுலசுவையும் விட அதிக போர்க் குணம் கொண்டவராக இருந்தார் என்று குறிப்பிடப்படுகிறது.[1] இவரது இறப்பு குறித்த பதிவுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபடுகின்றன. லிவியின் தொன்மவியல் கதையின் படி இவர் ஜூப்பிட்டரைக் கோபப்படுத்தினார், ஜூப்பிட்டர் ஒரு மின்னலைக் கொண்டு தாக்கிய இவரைக் கொன்றார்.[2] தொன்மவியல் அல்லாத மற்ற நூல்கள் 32 ஆண்டுகள்[3] ஆட்சி செய்ததற்குப் பிறகு இவர் பிளேக் நோயால் இறந்தார் என்று குறிப்பிடுகின்றன.[4]
உசாத்துணை
[தொகு]- ↑ "Titus Livius (Livy), The History of Rome, Book 1, chapter 22". www.perseus.tufts.edu. Retrieved 2020-12-12.
- ↑ "Titus Livius (Livy), The History of Rome, Book 1, chapter 31". www.perseus.tufts.edu. Retrieved 2020-12-12.
- ↑ லிவி, ab urbe condita libri, I
- ↑ Penella, Robert J. (1990/05). "Vires/Robur/Opes and Ferocia in Livy's Account of Romulus and Tullus Hostillus". The Classical Quarterly. 40 (1): 207-213.