உள்ளடக்கத்துக்குச் செல்

துறை சார் சமூகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துறை சார் சமூகம் ஒரு துறையை அல்லது தொழிலை மையமாக வைத்து பின்னப்படும் ஒரு சமூகமாகும். ஒரு துறையைப் பற்றிய அறிவை பகிர, மேம்படுத்த, முன்னேற்ற, சீர்தரங்களை ஏற்படுத்த, துறை சாரரின் நலன்களைப் பேண, துறையின் முக்கியத்துவை விளக்கி அதின் சமூக நிலையை உயர்த்த இச்சமூகங்கள் பங்காற்றுகின்றன.

இச்சமூகங்கள் தொழிலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்திய மற்றும் தமிழ்ச் சாதிச் சமூகங்களில் இருந்து வேறுபட்டவை ஆகும். துறை சார் சமூகங்கள் பிறப்பின் அடிப்படையில் அமைவதில்லை. பொதுவாக யார் அத்தொழிலை மேற்கொண்டாலும் அத்துறைசார் சமூகத்தில் சேரக்கூடியதாக இருக்கும். இருப்பினும் துறை சார் சமூகங்களுக்கு மத்தியில் சமூக படி நிலை ஏற்ற தாழ்வுகள், பொருளாதார படிநிலைகளும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துறை_சார்_சமூகம்&oldid=1399435" இலிருந்து மீள்விக்கப்பட்டது