துருவ உயிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துருவ உயிரி[தொகு]

ஆர்டிக் கடல்

துருவப் பகுதிகள், தட்பவெப்பநிலையிலும் மண் வகையிலும் தனித்தன்மை பெற்றுள்ளமையால் இப்பகுதியில் வாழும் உயிரிகளும், அவற்றின் தகவமைப்பிலும் பரவலிலும் தனித்தன்மை கொண்டுள்ளன. சாலஞ்சர் கடவாய்வுப் பயணத்தின்போது துருவ உயிரிகளின் (Polar Organisms) தனித்தன்மை கண்டறியப்பட்டது. இரு துருவங்களுக்கு இடைப்பட்ட கடற்பகுதிகளில் காணப்படாத பல உயிரிகள் துருவப் பகுதிகளில் மட்டுமே வாழ்கின்ற தன்மையும் அறியப்பட்டது. இது இருதுருவப்பரவல் (Bipolar Distribution) எனப் பெயரிடப்பட்டது.

தட்பவெப்பநிலை[தொகு]

துருவநிலைப்பகுதிகள், குளிர் பாலைவனங்களாகக் கருதப்படுகின்றன. இவை பனிக்கட்டியும் உறைபனியும் மிகுந்த நிலப்பகுதிகளாகும். ஆர்டிக் பகுதியில் தொடர்ச்சியாகப் பல மாதங்கள் இருள் சூழ்ந்து காணப்படும். குறுகிய கோடைகாலத்தில் நீண்ட பகற்பொழுது காணப்படுகிறது. அப்போது வெப்பநிலை உயரும்போது நிலத்தின் மேற்பகுதியில் காணப்படும் பனிக்கட்டி உருகும் நிலை அடைகிறது. எனினும், கீழ்ப்பகுதி நீர் உறைந்த நிலையில் காணப்படும். கோடைக்காலத்தில் அளவு மழை பெறுகிறது. இங்கு ஈரப்பதம் மிகுந்துள்ளமையால் நீர் ஆவியாக மிகக் குறைவாகவே உள்ளது.

நிலவகை[தொகு]

தட்பவெப்பநிலை, தாவரவகை இவற்றின் அடிப்படையில் இப்பகுதி தூந்தரா என்னும் வகையைச் சார்ந்ததாகக் கருதப்படும். போதிய வெப்பம் இல்லாமையால் தாவர, விலங்கின உடல்கள் மிகக் குறைவாகச் சிதைவிறுகின்றன. இதனால் மண்ணின் அமிலத்தன்மை மிகுந்து காணப்படும். நிலப்பரப்பு மரங்களற்ற தட்டையான பகுதிகளாக உள்ளது. மேடுபள்ளத்துடன் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்கும் நிலையிலும் காணப்படுகின்றன.

தாவர இனத்தொகுதி[தொகு]

கோடைக்காலத்தில் புல், கோரைப்புல் ஆகியன செழித்தோங்கியுள்ளன. நிலப்பரப்பின் பெரும்பகுதியில் மரப்பாசி, பாசி, நாணற்புல் போன்ற பூக்கும் புல்வகை, குத்துச்செடி போன்றவை காணப்படுகின்றன. தாவரங்கள் உருவில் சிறியவை. பெரிய மரங்கள் காணப்படுவதில்லை. தரைப்பகுதி ஒழுங்கற்று இருப்பதால் தாவர வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

விலங்கினத் தொகுதி[தொகு]

பனிக்கரடி

ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பெருங்கடல்களில் காணப்படும் சில விலங்கினங்கள் கடற்பகுதிகளில் காணப்படுவதில்லை. மினியோத்திலா, கிராம்போனியா போன்ற உயிர்களும், கடற்பூச்சி மற்றும் சுறாமீன் இனமும் மட்டுமே துருவப்பகுதிகளில் காணப்படுகிறது. பூச்சி இனங்கள் இங்குள்ளதால் சில பறவையினங்கள் கோடைகாலத்தில் இங்கு வருகின்றன.

பாலூட்டி இனங்களில் ஆர்டிக் முயல், ஆர்டிக் மூஞ்சுறு, லெம்மிங், சீல், பனிக்கரடி போன்ற உயிரினங்கள் காணப்படுகின்றன. சீல், வால்ரஸ் போன்ற கடல்வாழ் பாலூட்டிகள் தரைப்பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக வரும் போது கரடிகள் அவற்றைக் கொன்று தின்று வாழ்கின்றன. ஆர்டிக் நரிகள், கரடிகள் விட்டுச்செல்லும் ஊன் பகுதிகளை உண்டு வாழ்கின்றன.

விலங்குகளின் தகவமைப்புகள்[தொகு]

இப்பகுதிகளில் வாழும் விலங்குகள் கடுமையான சூழ்நிலையிலும் வாழ்வதற்கேற்ற உடலமைப்பைப் பெற்றுள்ளன. குளிர்காலத்தில் சில விலங்குகள் புலம்பெயர்ந்து இடப்பெயர்ச்சி செய்கின்றன. அல்லது குளிர் உறக்கம் (Hibernation) கொள்கின்றன. பெரிய அமைப்புள்ள விலங்குகள் கடுமையான குளிரையும் தாங்கிக் கொள்கின்றன. இவ்விலங்குகளுக்கு முரட்டுத் தோல் உண்டு. விலங்குகளில் நிறமிகள் காணப்படுவதில்லை. இவை வெண்மை நிறம், வெண்சாம்பல் நிறம் கொண்டவையாக காணப்படுகின்றன.

[1] [2] [3] [4] [5]

  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி 9
  2. H. Robinson, Biography of London, 1978
  3. "10 years of Antarctic protection!"
  4. "Life in the Polar Regions: Animals, Plants, and Others in Extreme Environments".
  5. "ARCTIC WILDLIFE".
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருவ_உயிரி&oldid=2446344" இருந்து மீள்விக்கப்பட்டது