உள்ளடக்கத்துக்குச் செல்

தீ நுண்மம் நகர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீ நுண்மம் நகர்தல் (virus Movement) என்பது உயிரணுக்குள் தீ நுண்மத்தின் மரபணு துகளக்ள் (genetic material) நகர்வதை அல்லது இரு அல்லது உயிரில் உள்ள மற்ற பாகத்தில் உள்ள உயிரணுக்கு இடையே தீ நுண்மம் அல்லது அதனின் மரபணு துகள்கள் நகர்வதை குறிக்கும். இதனை இரு வகையாக பிரிக்கலாம்.

1. உயிரணுக்குள் நகர்தல் (intracellular movement)


2. உயிரணுக்கிடையே நகர்தல் (cell-cell movement or intercellular movement)

உயிரணுக்குள் நகர்தல்:

[தொகு]
செமினி நுண்மம் உயிரணுக்களில் நகர்வதை விளக்கும் படம்.

ஒரு செல்லின் உட்கருவில் (nucleus) இருந்து வெளிபகுதி (cytoplasm) வரும் அல்லது வெளியில் இருந்து உட்கருவுக்கும் எடுத்து செல்லும் நிகழ்வை உயிரணுக்குள் நகர்தல் எனலாம். தீ நுண்மங்களின் சில புரதங்கள் அதனின் மரபணு துகளை, செல்லின் உட்கருவில் இருந்து வெளிபகுதிக்கும் அல்லது வெளியில் இருந்து உட்கருவுக்கும் எடுத்து செல்லும் தன்மையெய் கொண்டுள்ளன. அத்தகையெ புரதங்களுக்கு உயிரணுவின் உள்-வெளி புரதம் (nuclear shuttle protein) (Ex. Coat protein of monopartite geminiviruses or BV1 of Bipartite geminiviruses) என அழைக்கலாம். இவைகள் உட்கருவை சுற்றி உள்ள சவ்வில் (nuclear membrane) உள்ள மெல்லிய துளைகள் மூலம் நகர்கின்றன. இவ் மெல்லிய துளைக்கு உட்கரு சவ் நுண்துளை (nuclear membrane pore) என விளிக்கலாம்.

உயிரணுக்கிடையே நகர்தல்:

[தொகு]

ஒரு உறுப்பின் உயிரணுவில் இருந்து மற்ற பாகத்தின் உயிரணுவுக்கு மூலக்கூறுகள் கடத்தப்படுவதை உயிரணுக்கிடையே நகர்தல் என அழைக்கலாம். பல்வேறு தீ நுண்மங்கள் அதனின் துகளை வெகு தொலைவில் நகர்த்துவதற்கு பல வகையான திட்டங்களை கொண்டுள்ளன. தீ நுண்மங்களின் சில புரதங்கள் அதனின் மரபணு துகளை கடத்துவதற்கு பயன்படுகிறது. இவைகளுக்கு உயிரணுக்கிடையே நகர்த்தும் புரதம் (cell-cell movement protein) என அழைக்கலாம் (BC1 of Bipartite Geminiviruses).செல்களுக்கு இடையே உள்ள பிலசுமதேசுமேட்ட (Plasmadesmata) என்னும் நுண்ணிய துளைகள் மூலம் மற்ற உயிரணுக்களுக்கு நகர்கின்றன. மேலும் இந் நுண்ணிய துளைகள் குறிபிட்ட அளவுள்ள மூலக்கூறுகளை கடத்தும் தன்மையெய் கொண்டுள்ளன. இத்தன்மைக்கு வரைவளவு கடத்தல் (size exclusion limit) என அழைக்கப்படும். தீ நுண்மங்கள் நகரும் போது, அதனின் புரதங்கள் வரைவளவு கடத்தும் தன்மையெய் உடைத்து , அளவில் பெரிய மூலக்கூறுகளையும் கடத்தி செல்லும் வீரியம் மிக்கவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீ_நுண்மம்_நகர்தல்&oldid=4125561" இலிருந்து மீள்விக்கப்பட்டது