தீவினை (பௌத்தநெறி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீவினைகள் பத்து என்று பௌத்தநெறி குறிப்பிடுகிறது. மணிமேகலை நூலில், இவை என்னென்ன என்று அறவண அடிகள் மணிமேகலைக்கு விளக்குகிறார். இவற்றைப் பாரமிதை என்றும் வழங்குவர். அவை:

  • கொலை, களவு, காமம் – 3
  • பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் – 4
  • வெஃகல், வெகுளல், பொல்லாக் காட்சி – 3 [1]

அடிக்குறிப்பு[தொகு]

  1. கொலையே களவே காமத் தீவிழைவு
    உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்,
    பொய்யே குறளை கடுஞ்சொல் பயன்இல்
    சொல்எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்,
    வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று
    உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும்எனப்
    பத்து வகையால் பயன்தெரி புலவர் - மணிமேகலை, காதை 24, 125-131

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீவினை_(பௌத்தநெறி)&oldid=1286526" இலிருந்து மீள்விக்கப்பட்டது