தீத்தடுப்பான்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீத்தடுப்பான்கள்[தொகு]

வெப்ப ஆற்றல் நமக்குப் பெரிதும் பயன்படுகிறது. அதே நேரத்தில், வெப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், பெரும் சேதத்தை உண்டாக்கும். தீ விபத்தால் உயிர்ச் சேதம் ஏற்பட்டு பொருள்களுக்கும் இழப்பு ஏற்படுவதை பத்திரிகைகளின் வாயிலாக அறிகிறோம். ஆகவே, தீ விபத்தை எப்படித் தடுப்பது என்பதையும் பல்வேறு வழிகளில் தீத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. தீயைக் கட்டுப்படுத்தும் மற்றும் அணைக்கும் முறைகள்

  • தீப்பற்றிய இடத்தில் உள்ள எரியக் கூடிய பொருள்களை அப்புறப்படுத்தவும்.
  • தீப்பற்றியவுடன், மணல் அல்லது கம்பளியைப் பயன்படுத்தி காற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தவும்.
  • நீரைப் பயன்படுத்தி தீப்பற்றாதபடி வெப்பநிலையைக் குறைக்கவும். பொதுவாக நீரும், மணலும் தீயை அணைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. நீரும், மணலும் காற்றோட்டத்தைக் குறைத்துத் தீயைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக, எண்ணெடீநு தீப்பற்றி எரியும்போது அதைக் கட்டுப்படுத்தத்

தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில், எண்ணெயானது நீரைவிட லேசானது, தண்ணீரின் மேல் மிதந்து மிகப் பெரிய விபத்துகளை ஏற்படுத்தும். ஆகையால், எண்ணெயினால் பற்றி எரியக் கூடிய தீயை நுரைப்பானைக் (ஃபோமைட்) கொண்டு அணைக்க வேண்டும். தீயானது மின் சாதனங்களினாலோ அல்லது மின் கசிவினாலோ ஏற்படுகிறது. தீயணைப்பான் பள்ளிகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களில் சிவப்பு நிறத்தில் தீயணைப்பான் வைத்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம். எப்பொழு தெல்லாம் தீ விபத்து ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் தீ அணைப்பானைப் பயன்படுத்தித் தீயை அணைக்க வேண்டும். தீயை அணைப்பதற்கு திண்ம கார்பன்டைஆக்ஸைடு அல்லது கர்பன்டெட்ராகுளரைடு பயன்படுத்தப்படுகிறது. நீரினை தீயை அணைப்பதற்கு பயன்படுத்தும்போது மின் அதிர்வினால் பாதிப்பு ஏற்படும். தீயணைப்பு-101

[1] [2]

  1. https://en.wikipedia.org/wiki/Fire_safety
  2. http://www.nfpa.org/public-education/campaigns/fire-prevention-week
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீத்தடுப்பான்கள்&oldid=2723290" இலிருந்து மீள்விக்கப்பட்டது