தி மிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மைக்கேல் கிரிகோரி மிசானின் (Michael Gregory Mizanin பிறப்பு: அக்டோபர் 8, 1980) ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், நடிகர் மற்றும் ஊடக ஆளுமை. இவர் தற்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டு அங்கு இவர் தி மிஸ் என்ற மேடைப் பெயரில் ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில் பங்குகொண்டுள்ளார்.

மிசானின் முதலில் ஒரு மைய்மை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக ஈடுபட்டதன் மூலம் பரவலாக புகழ் பெற்றார். இவர் 2001 ஆம் ஆண்டில் எம்டிவியின் தி ரியல் வேர்ல்ட்: பேக் டு நியூயார்க் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பின்னர் அதன் தொடரான ரியல் வேர்ல்ட் / ரோட் ரூல்ஸ் சேலஞ்சில் 2002 முதல் 2005 வரை கலந்துகொண்டார், அங்கு இவர் தி கான்ட்லெட் மற்றும் தி இன்ஃபெர்னோவில் இறுதிப் போட்டி வரை சென்றார்.

மேலும், இவர்நெட்வொர்க் ரியாலிட்டி ஸ்டார்ஸ் என்பதில் இறுதிப் போட்டி வரை சென்றார். மேலும் 2006 ஆம் ஆண்டில் ஃபியர் ஃபேக்டரின் 3-பகுதி ரியாலிட்டி ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் வாகையாளர் பட்டத்தின வென்றார். டஃப் எனஃப்பின் நான்காவது பருவத்தில் இரண்டாவது இடம் பெற்றார். பின்னர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் தனது மற்போர் வாழ்க்கையினைத் தொடங்கினார். மிசானின் திவா தேடல், மொத்த திவாஸ் மற்றும் டஃப் எனஃப் ஆகிய நிகழ்ச்சிகளில் தோன்றினார். அவரும் அவரது மனைவி மேரிஸும் 2018 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட மிஸ் & மிஸஸ் என்ற தங்களது சொந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்தனர். டபிள்யு டபிள்யு இ படமனை நிறுவனம் தயாரித்த பல படங்களிலும் இவர் நடித்துள்ளார், தி மரைன் 3: ஹோம்ஃபிரண்ட், தி மரைன் 4: மூவிங் டார்கெட் மற்றும் தி மரைன் 5: போர்க்களத்தில் ஜேக் கார்டர் கதாப்பத்திரத்தில் நடித்தார்.

அதே போல் கிறிஸ்மஸ் பவுண்டி மற்றும் சாண்டாவின் லிட்டில் ஹெல்பர் ஆகிய படங்களிலும் நடித்தார். டீப் சவுத் மல்யுத்தம் மற்றும் ஓஹியோ பள்ளத்தாக்கு மல்யுத்தத்தில் பயிற்சி பெற்ற பின்னர், இவர் 2006 இல் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் பிரதான வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றார். உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் இவர் இதுவரை மொத்தம் பதினெட்டு வாகையாளர் பட்டத்தினை வென்றுள்ளார். ஒரு முறை உலக மற்போர் மகிழ்கலை வாகையாளர் பட்டம், கண்டங்களுக்கிடையேயான வாகையாளர் பட்டத்தின எட்டு முறையும், யுனைடெட் ஸ்டேட்ஸ் வாகையாளர் பட்டத்தினை இரண்டு முறையும், மற்றும் ஏழு முறை இணை வாகையாளர் பட்டங்கள் போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார். மேலும் 25 ஆவது டிரிபிள் கிரவுண் வாகையாளர் பட்டம், 14 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிராண்ஸ்லாம் பட்டம், 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற மணி இன் தெ பேங்க் போன்ற போட்டிகளிலும் இவர் பட்டம் பெற்றுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

மைக்கேல் கிரிகோரி மிசானின் அக்டோபர் 8, 1980 இல் [1] ஓஹியோவின் பார்மாவில் பிறந்து வளர்ந்தார்,[1][2] இவரது பெற்றோர் விவாகரத்து பெற்றவர்கள். இவருக்கு மாற்றாந் தந்தையும் இரண்டு உடன்பிறப்புகளும் உள்ளனர்.[3][4][5][6][7] இவர் நார்மண்டி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார் மற்றும் அங்கு கூடைப்பந்து அணியின் தலைவராக இருந்தார்.[1][2] இவர்நீச்சலிலும் பங்கேற்றார்[1] பின்னர் இவர் மியாமி பல்கலைக்கழகத்தில் பயின்றார்

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "The Miz". Canadian Online Explorer. மூல முகவரியிலிருந்து April 29, 2015 அன்று பரணிடப்பட்டது.
  2. 2.0 2.1 Varsallone, Jim (August 21, 2009). "WWE's Miz embodies sports entertainment". மூல முகவரியிலிருந்து September 9, 2009 அன்று பரணிடப்பட்டது.
  3. Mizanin, Mike. "Mike's Official Website Biography". மூல முகவரியிலிருந்து February 14, 2012 அன்று பரணிடப்பட்டது.
  4. Mizanin, Mike. "Maryse at 2012 Hall of Fame".
  5. Mizanin, Mike. "WWE News: Former Diva Maryse Opens Up About WWE Exit, Miz, Playboy, Stalker Woes". மூல முகவரியிலிருந்து November 20, 2012 அன்று பரணிடப்பட்டது.
  6. Mizanin, Mike. "Exclusive: Maryse Talks About WWE Release! being Done With Wrestling, House Of Maryse & More!". மூல முகவரியிலிருந்து April 5, 2012 அன்று பரணிடப்பட்டது.
  7. Nesbitt, Cherylann. "Mike 'The Miz' Mizanin Knows His Fiance is hotter". MTV. மூல முகவரியிலிருந்து October 16, 2013 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_மிஸ்&oldid=2905263" இருந்து மீள்விக்கப்பட்டது