தி பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்
இயக்கம்கில்லோ போன்றிகோர்வோ
வெளியீடுசெப்டம்பர் 8, 1966 (1966-09-08)(Algeria)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇத்தாலி
அல்ஜீரியா
மொழிஅரபி
பிரெஞ்ச்
ஆக்கச்செலவு$800,000

தி பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் (ஆங்கிலம்: The Battle of Algiers இத்தாலி: La battaglia di Algeri; அரபி: معركة الجزائر‎; பிரெஞ்ச்: La Bataille d'Alger) என்பது இத்தாலிய - அல்ஜீரியத் தயாரிப்புத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் அல்ஜீரியாவைச் சேர்ந்த புரட்சிக் குழுவான தேசிய விடுதலை முன்னணி (National Liberation Front) அமைப்பு அல்ஜீரியப் போரின் போது (1954 - 1962) பிரான்சு அரசுக்கு எதிராக வட ஆப்பிரிக்காவில் செய்த கிளர்ச்சியைப் பற்றியத் திரைபப்டம் ஆகும். இத்திரைப்படத்தை கில்லோ போன்றிகோர்வோ (Gillo Pontecorvo) இயக்கியிருந்தார். 1966 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் பிரான்சு நாட்டில் தடை செய்யப்பட்டது. பின்னர் 1971 ஆம் ஆண்டு தடை நீக்கப்பட்டு வெளியிடப்பட்டது.[1] இது கறுப்பு வெள்ளைத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் படத்தொகுப்பானது ஆவணப்படத்தைப் போல செய்யப்பட்டிருக்கும். இத்திரைப்படம் இத்தாலிய சமூக நேரடித்தன்மைத் (Italian neorealism) திரைப்படம் ஆகும்.[2]

இத்திரைப்படம் இங்கிலாந்தின் சைட் & சவுண்ட் (Sight & Sound ) மாதாந்திர சினிமா இதழின் சிறந்த 250 திரைப்படங்களின் ஓட்டெடுப்பில் 48 வது இடத்திலும்[3], எம்பயர் (Empire) பத்திரிகையின் சிறந்த 500 திரைப்படங்களின் வரிசையில் 120 வது இடத்தையும் பெற்றது.[4]

மேற்கோள்கள்[தொகு]