உள்ளடக்கத்துக்குச் செல்

தி கால் (2013 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி கால்
இயக்கம்பிராட் ஆண்டர்சன்
தயாரிப்பு
 • ஜெஃப் கிரெப்
 • மைக்கேல் லூஸி
 • மைக்கேல் ஏ. ஹெல்ஃபான்ட்
 • ராபர்ட் எல். ஸ்டெயின்
 • பிராட்லி காலோ
திரைக்கதைரிச்சர்டு டி 'ஒவிடியோ
இசைஜான் டெப்னி
நடிப்பு
 • ஹாலே பெர்ரி
 • அபுகெய்ல் ப்ரெஸ்லின்
 • மோரிஸ் செஸ்ட்நட்
 • மைக்கேல் ஏக்லண்ட்
 • டேவிட் ஓங்குங்கா
 • மைக்கேல் இம்பிரியோலி
ஒளிப்பதிவுதாமஸ் யாட்ச்கோ
படத்தொகுப்புஏவி யூபியன்
கலையகம்
 • ஸ்டேஜ் 6 ஃபிலிம்ஸ்
 • ட்ரோகா பிக்சர்ஸ்
 • டபிள்யூடபியூ ஸ்டுடியோஸ்
 • அமேசியா எண்டர்டெயின்மெண்ட்
 • அபோதியோசிஸ் மீடியா குரூப்
விநியோகம்ட்ரைஸ்டார் பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 15, 2013 (2013-03-15)
ஓட்டம்94 நிமிடங்கள்[1]
நாடுஅமேரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$13 மில்லியன்[2]
மொத்த வருவாய்$68.6 மில்லியன்[2]

தி கால் (The Call) என்பது 2013 ஆண்டைய அமெரிக்க உளவியல், திரில்லர், திகில், குற்றவியல் திரைப்படம் ஆகும். படத்தை பிராட் ஆண்டர்சன் இயக்க,  ரிச்சர்டு டி 'ஒவிடியோ எழுதியுள்ளார். இந்தப் படத்தில்   கேசி வெல்சன் என்ற பாத்திரத்தில் அபிகேல் பிரெஸ்லின் நடித்துள்ளார், இவர் தொடர் கொலைக்காரனால் கடத்தப்பட்ட ஓர் இளம்பெண்ணாகவும்,  ஹாலே பெர்ரி ஒரு 9-1-1 அவசர உதவி தொலைபேசி சேவையில் பணியாற்றும் பெண்ணான ஜோர்டன் டர்னராகவும் நடித்துள்ளார். மேலும் மோரிஸ் செஸ்ட்நட், மைக்கேல் எக்க்யூண்ட், மைக்கேல் இம்பீரியோலி,  டேவிட் ஓங்குகா ஆகிய நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் கதையானது துவக்கத்தில் ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக உருவாக்கப்பட்டது என்று கருதப்பட்டுகிறது, ஆனால் டி'ஓவிடியோ அதை ஒரு திரைப்படமாக மீண்டும் மாற்றி எழுதியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணியானது 2012 சூலையில் துவங்கி, 25 நாட்கள் செலவிடப்பட்டன, படத்தின் அனைத்து காட்சிகளும் கலிபோர்னியாவில், முக்கியமாக பர்பாங் மற்றும் சாண்டா கிளரிட்டாவில் படம் பிடிக்கப்பட்டன.

2013 பெப்ரவரி 26 ஆம் நாள்  ரீஜல் சவுத் பீச் திரையரங்கில் நடத்தப்பட்ட மகளிர் சர்வதேச திரைப்பட விழாவில் தி கால் திரைப்படம்  திரையிடப்பட்டது. படத்தை டிராஸ்டார் பிக்சர்ஸ் 2013 மார்ச் 15  அன்று திரையரங்குகளில் வெளியிட்டது. பல விமர்சகர்களால் உயர் கருத்தாக கருதப்பட்ட இந்த திரைப்படம் வணிகரீதியான வெற்றியை நிரூபித்தது, $ 13 மில்லியன் டாலர் மதிப்பில் தயாரிக்கப்பட்ட இப்படம், $ 68 மில்லியனுக்கும் மேல் வசூலித்தது.   டீன் சாய்ஸ் விருதுகளில் நாடகத் திரைப்பட நடிகைக்கான  விருதுக்கும், பிஈடி விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதுக்கும் ஹாலே பெர்ரி பரிந்துரைக்கப்பட்டார். அதே நேரத்தில் திரைப்படமானது விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் பெர்ரி மற்றும் ப்ரெஸ்லின் நடிப்பையும்  திரைப்படத்தின் புதிரை (சஸ்பென்ஸ்) பாராட்டினார்.

கதை[தொகு]

ஜோர்டன் டர்னர் (ஹாலே பெர்ரி) ஒரு 911 அவசர உதவி மைய தொலைபேசி பணியாளராக வேலைசெய்கிறார். அவருக்கு ஒரு நாள் இலியா ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வருகிறது. அவள் தன்னுடைய வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைய முயல்வதாக அச்சமுற்று பேசுகிறாள். அவளுடன் ஜோர்டன் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த மர்ம நபர் கண்ணாடியை உடைத்து வீட்டிற்குள் புகுந்து விடுகிறான்.

ஜோர்டன் தொலைபேசியில் இலியாவிடம் மாடிக்கு போய், படுக்கை அறையில் கட்டிலுக்கு அடியில் படுத்துக்கொள் என்று ஆலோசனைகளைத் தந்தபடி அவளுக்கு நம்பிக்கை ஊட்டியபடி இருக்கிறார். இலியாவும் அப்படியே செய்கிறாள். உள்ளே புகுந்த அந்த மர்ம மனிதன் வீடிடல் யாரும் அகப்படாததைத் தொடர்ந்து, கிளம்ப எத்தனிக்கின்றான். அந்த நேம்பார்த்து இவியா செல்பேசிக்கும் ஹல்லி தொலைபேசிக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இதனால் பதற்றம் அடையும் ஹல்லி சிநிதிக்காமல் இலியாவின் செல்பேசியை அழைத்துவிடுகிறார். இந்த செல்பேசி ஒலித்து, கட்டிலுக்கு அடியில் பதிங்கியவளைக் கொலைகாரனுக்குக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. இலியாவை கொலைகாரன் பிடித்து வெளியே இழுத்து செல்பேசியை வாங்கி ஜோர்டனிடம் பேசுகிறான், அந்தப் பெண்ணை எதுவும் செய்யாவேண்டாம் என்று ஜோர்டன் அவனிடம் கெஞ்சுகிறாள். ஆனால் அவன் அல்ரெடி டன் என்று சொல்லி தொடர்பைத் துண்டிக்கிறான். மறு நாள் அந்த பெண் சடலமாக மீட்கபடுகிறாள். இதனாள் அந்த பெண்ணின் சாவுக்கு தானே காரணம் என்று ஜோர்டன் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி வருந்துகிறார்.

ஆறு மாதம் கழித்து ஒரு பொண்ணிடம் இருந்து திரும்பவும் ஒரு பதட்டமான அழைப்பு 911க்கு வருகிறது. அந்த அழைப்பை ஜோர்டன் ஏற்று பேசுகிறார். வணிக வளாகத்துக்கு அருகில் தன் கடத்தப்பட்தாகவும் தான் ஒரு மகிழுந்தில் இருப்பதாகவும் கூறுகிறாள். ஆறு மாசத்துக்கு முன்னர் இறந்த பொண்ணைப் போல இந்தப் பொண்ணை இறக்க விடக்கூடாது என்று மிக எச்சரிக்கையாக ஜோர்டன் செயல்படுகிறார். இந்தமுறை ஜோர்டன் தன் முயற்சியில் வெற்றி பெற்று அந்த பெண்ணை காப்பாற்றினாரா ? என்பதே கதையின் முடிவு.

மேற்கோள்கள்[தொகு]

 1. "THE CALL (15)". British Board of Film Classification. June 7, 2013. பார்க்கப்பட்ட நாள் June 12, 2013.
 2. 2.0 2.1 "The Call (2013)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் December 7, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_கால்_(2013_திரைப்படம்)&oldid=2705556" இலிருந்து மீள்விக்கப்பட்டது