திவீபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திவீபா
இயக்கம்கிரிஷ் காசரவள்ளி
தயாரிப்புசௌந்தர்யா
திரைக்கதைநாகேந்திர ராவ் ஆர் மானே (விஷ்ணு)
இசைஐசக் தாமஸ் கொட்டுகப்பள்ளி
நடிப்புசௌந்தர்யா
அவினாஷ்
எம். வி. வாசுதேவ ராவ்
ஹரிஷ் ராஜ்
ஒளிப்பதிவுஎச். எம். இராமச்ந்த்இர ஹல்கர்
படத்தொகுப்புஎம். என். சுவாமி
வெளியீடு26 செப்டம்பர் 2002 (2002-09-26)
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்

திவீபா (பொருள் :  தீவு, Dweepa) என்பது 2002 ஆம் ஆண்டு வெளியான இந்திய கன்னட திரைப்படம் ஆகும். இப்படத்தை கிரிஷ் காசரவள்ளி இயக்கினார். இப்படத்தின் கதை புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரான நார்பட் டி' சௌசா இதே பெயரில் எழுதிய புதினத்தை அடிப்படையக கொண்டது. இப்படத்தில் சௌந்தர்யா மற்றும் அவினாஷ் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருந்தனர். திவீபா படமானது அணை கட்டுமானத்தால் பூர்வீக மக்கள் இடம்பெயர்வது போன்ற பிரச்சினைகளை அடிப்படையாக்க கொண்டது. இது இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றது.[1] கர்நாடக மாநில திரைப்பட விருதுகள் நான்கையும், மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் பெற்றது.

கதை[தொகு]

ஓர் அணையின் பின்புறம் சீதா பர்வதா என்ற தீவு கிராமம் உள்ளது. இந்தத தீவு கடும் மழையால் மெதுவாக நீரில் மூழ்கிவருகிறது. அந்த தீவு கிராம மக்களை வேறு இடத்துக்கு மாற்ற அரசாங்கம் அவர்களுக்கு சொந்தமான சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கி அதன் மூலம் மக்களை வெளியேற்றிவருகிறது. கிராம கோவில் பூசாரி துக்கஜ்ஜா, அவரது மகன் கணபா மற்றும் அவரது மருமகள் நாகி ஆகியோர் தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி, அரசாங்கம் கொடுக்கும் சொற்ப இழப்பீட்டை கொண்டு வாழ்வது சாத்தியமில்லை என கருதுகின்றனர். அவர்களுக்கு சொந்தமாக ஒரு சிறிய குடிசை உள்ளது. அவர்கள் அங்கிருந்து வெளியேற 25,000 இழப்பீடு அளிக்க அரசு முன்வருகிறது. இழப்பீடை வாங்கிக்கொண்டு வேறு இடத்துக்குச் சென்றால் இந்த கிராமத்தில் தாங்கள் மரியாதையாக அணுகப்படும் நிலை மாறிவிட்டு, வெளியூரில் தங்கள் வாழ்க்கைக்காக போராடும் ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்றாக மாறும் நிலை ஏற்படும் என கணபா கவலைப்படுகிறார். அவருடைய மனைவி நாகி நடைமுறை பார்வையும் நேர்மறை சிந்தனையும் கொண்டவள். தன்னையும் தன் குடும்பத்தையும் காக்கப் போராடுகிறாள். இதனால் இந்தக் குடும்பம் தீவை விட்டுப் போகாமலேயே இருக்கிறது. இந்தக் குடும்பத்துடன் தங்கவரும் நாகியின் உறவினரான கிருஷ்ணா குடும்பதின் அன்றாட நிகழ்வுகளில் தலையிடுகிறார். இதனால் நாகி - கணபா இடையிலான உறவில் விரிசல் விழுகிறது. இந்த சிக்கல்களைக் கடந்து அந்தக் குடும்பம் எப்படி அந்தத் தீவிலேயே தொடர்ந்து தங்குகிறது என்பதே மீதிக் கதை.

நடிப்பு[தொகு]

 • சௌந்தர்யா நாகியாக
 • அவினாஷ் கணபாவாக
 • எம். வி. வாசுதேவ ராவ் துக்கஜ்ஜாவாக
 • ஹரிஷ் ராஜ் கிருஷ்ணாவாக
 • புருஷோத்தம தலவத
 • சித்தராஜ் கல்யாங்கர்
 • மாலதி
 • விஜயசாரதி
 • ராதா ராமச்சந்திரா
 • சிருங்கேரி ராமண்ணா
 • சாவந்த்

விருதுகள் மற்றும் திரையிடல்கள்[தொகு]

49 வது தேசிய திரைப்பட விருதுகள்
2001–02 கர்நாடக மாநில திரைப்பட விருதுகள்
 • சிறந்த படம் - சௌந்தர்யா
 • சிறந்த இயக்கம் - கிரிஷ் காசரவள்ளி
 • சிறந்த நடிகை - சௌந்தர்யா
 • சிறந்த ஒளிப்பதிவு - எச். எம். ராமச்சந்திர ஹல்கெரே
50 வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
 • சிறந்த படம் - சோந்தர்யா
 • சிறந்த இயக்கம் - கிரிஷ் கசரவள்ளி
 • ஒரு சிறந்த பாத்திரத்தில் சிறந்த நடிகை - சௌந்தர்யா
திரையிடல்கள்
 • மனித உரிமைகள் கண்காணிப்பு சர்வதேச திரைப்பட விழா, நியூயார்க்
 • இந்தியாவின் 33 வது சர்வதேச திரைப்பட விழா
 • ஃபுகுவோகா திரைப்பட விழா, ஜப்பான்
 • டர்பன் சர்வதேச திரைப்பட விழா
 • ரோட்டர்டாமின் சர்வதேச திரைப்பட விழா
 • சினிமா விண்டேஜ் திட்டம், ஐசோலாசினிமா, கினோஆடாக்

இசை[தொகு]

இபடத்திற்கு தாமஸ் ஐசக் கொட்டுகப்பள்ளி இசை அமைத்துள்ளார்.

குறிப்புகள்[தொகு]

 

 1. (26 July 2002). "49TH National Film Award". செய்திக் குறிப்பு.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திவீபா&oldid=3277341" இலிருந்து மீள்விக்கப்பட்டது