திவவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


திவவு[தொகு]

யாழில் நரம்புகளைக் கோடு என்னும் உறுப்பில் இணைக்கும் நிலையில் அமைந்த வார்க்கட்டு திவவு எனப்படும். இது யாழில் நரம்பினை வலித்தற்கும்,மெலித்தற்கும் பயன்பட்டது. மாடகம் எனப் பிற்காலத்தார் பயன்படுத்திய முறுக்காணி பழமை பொருந்திய சீறியாழ் பேரியாழ்களிலே அமைக்கப்பெறவில்லை. கரிய நிறமுடைய கோட்டின்மீது கட்டப்பட்ட திவவானது கரிய நிறமுடைய பெண்ணின் கையில் அணியப்பட்ட வளையல் போலவும், கருங்குரங்கின் கையினைச் சுற்றிய பாம்பு போலவும் வடிவுபெற்றிருந்தது என்பது பத்துப்பாட்டில் ஆற்றுப் படைப்பாடல்களால் அறியப்படும்.[1]

  1. தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களில் பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் எழுதிய இசைத்தமிழ் நூல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவவு&oldid=3600147" இலிருந்து மீள்விக்கப்பட்டது