தில்லானா (பரதநாட்டியம்)
Appearance
தில்லானா மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும் நாட்டிய உருப்படி.[1] தில்லானா பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற பகுதிகளைக் கொண்டது. தில்லானா - திர்தில்லானா - தீம் திம் திரி திரி தில்லானா - போன்ற சொற்கட்டுகள் இந்த உருப்படி முழுவதும் இருக்கும். சரணப் பகுதியில் மட்டும் பாடல் இருக்கும். மத்திம காலத்தில் மிக விறுவிறுப்பாக ஆடப்படும். கண்ணையும் கருத்தையும் கவரும் கரண நிலைகள் (dance postures) தில்லானாவிற்கு அழகு சேர்க்கும். பொதுவாகத் தில்லானா பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற கீர்த்தனை அமைப்பில் இருக்கும். ஒரு சில தில்லானாக்களில் பல்லவி, அனுபல்லவி அல்லது பல்லவி, சரணம் மட்டும் அமைந்திருக்கும். நடனத்திற்காக உருவாக்கப்பட்ட தில்லானாக்களில் வேகம் அதிகமாக இருக்கும்.